இலங்கைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்! - ஆதாரம் எதையும் வெளியிடவில்லை | Islamic state has claimed responsibility for coordinated bombings in Sri Lanka

வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (23/04/2019)

கடைசி தொடர்பு:17:02 (23/04/2019)

இலங்கைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்! - ஆதாரம் எதையும் வெளியிடவில்லை

இலங்கை குண்டுவெடிப்புக்கு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை

ஈஸ்டர் தினத்தில் இலங்கை தலைநகர் கொழும்பில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்தக் கொடூரத் தாக்குதலில் தேவாலயங்களில் வழிபாடு நடத்தியவர்கள், ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்கள், ஊழியர்கள் என இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்கள்  தங்கள் உயிரை இழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பதற்றம் தணியாத நிலையில் நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு யார் காரணம் என இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடி விவாதம் நடத்தியது.

ஐ.எஸ்

இந்த நிலையில், இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. ஆங்கிலச் செய்தி இணையதளமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான அமேக் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், அதற்கான ஆதாரங்கள் எதையும் ஐ.எஸ் அமைப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், நியூசிலாந்து மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ரூவன் ஜெயவர்த்தனே கூறியிருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க