`எங்கள் மக்களை ஏன் இப்படிப் படுத்துகிறாய்!'- இறுதிச்சடங்கில் கதறி அழுத இலங்கை மக்கள் | final Rituals for people who are died sri lanka bomb blast

வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (24/04/2019)

கடைசி தொடர்பு:11:02 (24/04/2019)

`எங்கள் மக்களை ஏன் இப்படிப் படுத்துகிறாய்!'- இறுதிச்சடங்கில் கதறி அழுத இலங்கை மக்கள்

லங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுமா என்கிற அச்சத்தில் இலங்கை உள்ளது. விரைவில், இலங்கையில் முழு அமைதி திரும்பும் என்று அதிபர் மைத்ரி பால சிறிசேனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

இலங்கை குண்டு வெடிப்பில் இறவர்கள் உடல் அடக்கம்

புகைப்படம் ; வீரகேசரி 

கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து, இலங்கையில் சுற்றுலாவின் முதுகெலும்பாகக் கருதப்படும் அழகிய  நுவரேலியா நகரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், நுவரேலியாவில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.  தீவிர பயிற்சிபெற்ற 160 பேர் இலங்கை முழுவதும் பரவலாக இருப்பதாகவும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் இவர்கள் பயிற்சிபெற்றவர்கள் என்ற தகவலும் பரவிவருகிறது.  தீவிரவாதிகளின் பெயர் விவரம், செல்போன் எண்கள் ஆகியவற்றை இலங்கை அதிரடிப்படை கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பு நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஐ.எஸ் இயக்கம்

இதற்கிடையே, தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள், ஆங்காங்கே மொத்தமாகப் புதைக்கப்பட்டன. ஒரே இடத்தில் 50 சடலங்கள் வரை அடக்கம் செய்யப்பட்டன. 'கடவுளே உனக்குக் கண் இல்லையா... எங்கள் மக்களை ஏன் இப்படிப் படுத்துகிறாய்' என்று மக்கள் கதறி அழுத வண்ணம் இறுதி அஞ்சலி செலுத்தினர். குழிக்குள் சடலங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்க,  மேலே உறவினர்கள் கண்ணீர் மல்க இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் இயக்கம், தாக்குதல் நடத்தியவர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட  ஷாகீரா ஹாசிம் மட்டும் முகம் தெரியும்படி உள்ளார். மற்ற தீவிரவாதிகளின் முகத்தைத் துணியால் மூடியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க