தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37  பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு | Saudi Arabia beheads 37 people convicted of terrorism

வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (24/04/2019)

கடைசி தொடர்பு:19:57 (24/04/2019)

தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37  பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு

வுதியில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேரின் தலை பொது இடத்தில் துண்டித்து வீழ்த்தப்பட்டது. 

இஸ்லாமிய நாடு

ரியாத், மெக்கா, மெ,தீனா அஷீர்  நகரங்களில், தீவிரவாதிகளின் தலை துண்டிக்கப்பட்டன. மசூதிகளில் மதிய தொழுகைக்குப் பிறகு, மக்கள் மத்தியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்படும். சுமார் 3 மணி நேரம், பொது இடத்தில் மக்கள் பார்வைக்கு உடல்கள் வைக்கப்படும். இந்த முறையும் மரணதண்டனை இப்படித்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தீவிரவாத குழுக்களை உருவாக்க முயன்றவர்களுக்கு, இத்தகைய தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர். தலை துண்டித்துக் கொல்லப்பட்ட khaled bin Abdel Karim al-Tuwaijri  என்பவரின் உடல், பொது இடத்தில் பல மணி நேரம் தொங்கவிடப்பட்டது. குற்றத் தன்மையின் தீவிரத்தின் அடிப்படையில் அவரின் உடல் பொது இடத்தில் தொடங்கவிடப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு புத்தி புகட்டவும் இத்தகைய தண்டனை முறை நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரணதண்டனை வழங்கப்பட்டதில் 11 பேர் ஈரான் நாட்டுக்கு உளவு பார்த்து பிடிபட்டுள்ளனர். 14 பேர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் 16 வயது இளைஞர் ஒருவரும் இருந்தார் என்று ஆம்னிஸ்ட்டி அமைப்பு கூறியுள்ளது. 

தலை துண்டித்துக் கொல்லப்பட்ட அனைவருமே சவுதி அரேபியர்களே. ஆனால், ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். சவுதியில் சன்னி முஸ்லிம்கள் அதிகம். ஈரானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம். சவுதிக்கும் ஈரானுக்கும் அரசியல்ரீதியாக பகை அதிகரித்துவரும் நிலையில், 37 ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களின் தலையை சவுதி துண்டித்துள்ளது.

கடந்த 2016- ம் ஆண்டு, ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவர் நிமர் அல் நிமர் உள்ளிட்ட 47 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.  அதற்குப் பிறகு, இப்போதுதான் அதிகம் பேருக்கு ஒரே நாளில் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 149 பேருக்கு சவுதியில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.  உலகிலேயே மரணதண்டனை அதிகம் வழங்கும் நாடு சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க