`எங்களை சந்தேகக்கண்ணோடு பார்க்க வைத்துவிட்டார்களே!'- வேதனையில் இலங்கை இஸ்லாமியர்கள் | t'hey seems good people' - people says about wealthy brothers behind Sri Lanka's attacks

வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (25/04/2019)

கடைசி தொடர்பு:14:31 (25/04/2019)

`எங்களை சந்தேகக்கண்ணோடு பார்க்க வைத்துவிட்டார்களே!'- வேதனையில் இலங்கை இஸ்லாமியர்கள்

லங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது பெரிய தொழிலதிபரின் குடும்பத்தினர் என்கிற விவரம் தெரியவந்துள்ளது.   இலங்கையில் புகழ்பெற்ற மசாலா நிறுவனங்களின் அதிபர் முகமது இப்ராஹிம் என்பவரின் மகன்கள் குண்டுவெடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை மக்களுக்கு இவர்களின் குடும்பம் மிகவும் பரிச்சயமானது. முகமது இப்ராஹிமுக்கு 6 மகன்களும் 3 மகள்களும் உண்டு. குண்டு வெடிப்பில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக இப்ராஹிம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் மகன் 33 வயது இன்ஷாப் இப்ராஹிம் கொழும்புவில் உள்ள ஷாங்கிரி லா ஹோட்டலில் காலை உணவின் போது குண்டு வெடிக்கச் செய்தவர். கொழும்பு புறநகர்ப் பகுதியில் இவர் அலுமினிய தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார்.  

இலங்கை தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட வீடு

கொழும்பு புறநகரில் மகவாலே கார்டன் பகுதியில் 3 அடுக்கு மாடி கொண்ட வெள்ளை மாளிகையில் தன் சகோதரர் இல்ஹாம் இப்ராஹிமுடன் இவர் வசித்து வந்துள்ளனர். குண்டுவெடிப்பில், இவர்களுக்கு உள்ள தொடர்பை மோப்பம் பிடித்த இலங்கை போலீஸ் வீட்டில் ரெய்டு நடத்தச் சென்றது. அப்போது, வீட்டில் இருந்த இல்ஹாம் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் அவரும் மனைவி மற்றும் 3 குழந்தைகளும் இறந்து போனதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மகவாலே கார்டன் பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் இந்தக் குடும்பத்தினரை நன்கு தெரிந்துள்ளது. செல்வத்துடனும் செல்வாக்குடனும் அந்தப் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் கேட்கும் உதவியையும் முகம் சுளிக்காமல் செய்து தருவார்களாம். இப்படி, வாழ்ந்த குடும்பம் ஒரே நாளில் இத்தனை பேரை கொலை செய்யுமளவுக்கு எப்படித் துணிந்தார்கள் என்று நம்ப முடியாமல் அக்கம் பக்கத்தினர் தவிக்கின்றனர். 

இலங்கை குண்டு வெடிப்பு

இவர்களின் வீட்டுக்கு எதிரே வசித்து வரும் பாத்திமா ஃபாஸ்லா என்பவர் கூறுகையில், `உண்மையிலேயே இவர்களா இதைச் செய்தனர் என்று என்னால் நம்ப முடியவில்லை. முகமது இப்ராஹிம் அன்புடன் பழகுவார். கேட்கும் போதெல்லாம் உதவி செய்வார். பார்க்க நல்லவர்கள் போலவே தெரிந்தார்கள். ஏன் இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இவர்கள் இப்படிச் செய்தது எல்லா முஸ்லிம் மக்களையும் அவ்வவா சந்தேகக் கண்ணோடு பார்க்க வைத்து விட்டதே' என்று வேதனை தெரிவித்துள்ளார். 

தொழிலதிபர் முகமது இப்ராஹிமின் இளையமகன் இல்ஹாம் இப்ராஹிம்தான் தவ்கித் ஜமா அத் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். தீவிரவாதக் கருத்துகளை குடும்பத்தினரிடத்தில் இவர்தான் விதைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இன்ஷாப் இப்ராஹின் அலுமினிய தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர், `நல்ல கனிவு நிறைந்த பாஸ் அவர்' என்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க