`குண்டு வெடிப்பில் தேடப்பட்டவர் இறந்துவிட்டார்!'- இலங்கை அதிபர் அறிவிப்பு | Wanted Sri Lanka radical Hashim died in hotel attack: President

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (26/04/2019)

கடைசி தொடர்பு:13:31 (26/04/2019)

`குண்டு வெடிப்பில் தேடப்பட்டவர் இறந்துவிட்டார்!'- இலங்கை அதிபர் அறிவிப்பு

இலங்கை தொடர்குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த மதகுரு ஜக்ரன் ஹசின் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹாசிம்


ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இலங்கையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குலில் ஜக்ரன் ஹாசிம் என்பவர் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ஜக்ரன் ஹாசிமுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பு இருக்கலாம். அந்த அமைப்பு நடத்திய பல்வேறு தாக்குதலில் இவரது பங்கும் இருக்கலாம் எனப் பேசியிருந்தார். இந்நிலையில்தான் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் 6 பேரின் புகைப்படங்களை அந்நாட்டுக் காவல்துறை வெளியிட்டது. இதில் ஹாசிம் புகைப்படமும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கொழும்புவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் ஹாசிம் கொல்லப்பட்டதாக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவு போலீஸார் இதை உறுதி செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.