`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்!'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி | tamil girl achieves a world record in yoga at oman

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (26/04/2019)

கடைசி தொடர்பு:16:20 (26/04/2019)

`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்!'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஶ்ரீ வைஷ்ணவி ஜெயக்குமார் என்ற பத்து வயது சிறுமி ஓமன் நாட்டில் யோகாவில் உலக சாதனை நிகழ்த்தி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

சாதனை

 

``எங்களுக்குப் பூர்வீகம் தமிழ்நாடு. அப்பாவுடைய வேலைக்காகச் சின்ன வயசிலேயே மஸ்கட்டில் செட்டில் ஆகிட்டோம். நான்கு வருஷமாக யோகா கத்துக்கிறேன். ஆரம்பத்தில் விளையாட்டாக கத்துக்க ஆரம்பித்தாலும் ஒரு வருஷத்திலேயே யோகாவில் அதிக ஆர்வம் வந்துருச்சு. யோகாவில் எதாவது சாதனை நிகழ்த்தணும்ங்கிற ஆர்வத்தில், அதற்கான பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன்.

தமிழக சிறுமி

 

கடந்த வாரம் ஓமன் நாட்டில் உள்ள இந்தியன் எம்பஸியில் `உபவிஸ்த கோனாசான' என்ற ஆசனத்தில் 26 நிமிடம் 39 விநாடிகள் நின்று " ஆன்லைன் வேர்ல்டு ரெக்கார்ட்" என்ற உலக சாதனை நிகழ்த்தி உள்ளேன். மஸ்கட்டில் ஒரு தமிழ் சிறுமி யோகாசனத்தில் சாதனை புரிந்தது இதுதான் முதல் முறைனு சொன்னாங்க. செமையா பாராட்டினாங்க. என் ரெக்கார்டை வியப்பா பார்த்தாங்க. அடுத்தபடியாக கின்னஸ் சாதனைக்கான பயிற்சிகள் எடுத்துட்டு வர்றேன். என்னுடைய சாதனையால் இங்க இருக்கிற தமிழ் மக்களை யோகாசனத்துல ஆர்வம் காட்ட வைச்சிருக்கு. அடுத்தமாதம் இந்தியா வந்து தாய் மண்ணுல சாதனை நிகழ்த்துற திட்டம் இருக்கு" என்கிறார் புன்கையுடன்.


அதிகம் படித்தவை