2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை?! - புதிய சர்ச்சையில் கௌதம் கம்பீர் | Gautam Gambhir Has 2 Voter IDs, aam aadmi files complaint with EC

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (26/04/2019)

கடைசி தொடர்பு:18:33 (26/04/2019)

2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை?! - புதிய சர்ச்சையில் கௌதம் கம்பீர்

அதிஷி  கம்பீர் மீது புகார்

முன்னாள் இந்திய அணி கிரிக் கெட் வீரரும், நட்சத்திர வேட்பாளருமான கௌதம் கம்பீர் இரண்டு வாக்காளர் அடையாள வைத்திருப்பதாக ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி , அவர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

கௌதம் கம்பிர்

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதையொட்டி கிழக்கு டெல்லி தொகுதியில் பி.ஜே.பி நட்சத்திர வேட்பாளர் கௌதம் கம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி போட்டியிடுகிறார்.இந்த நிலையில் கௌதம் கம்பீர் மீது தேர்தல் ஆணையத்தில் அதிஷி புகார் தெரிவித்துள்ளார்.அந்தப் புகாரில் 'டெல்லியில் கரோல் பாஹா, மற்றும் ரஜீந்தர் நகர் பகுதிகள் என இரண்டு இடங்களில் கௌதம் கம்பீர் வாக்காளர் அடையாள அட்டை வைத்து இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு அதனை அவருடைய தமது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

கௌதம் கம்பீர் வாக்காளர் அடையாள அட்டை விவரம்

  கம்பீர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் ரஜீந்திர நகரில் இருக்கும் வாக்காளர் அடையாள அட்டை மட்டும் பதிவிட்டுவிட்டு  மற்றொன்றை மறைத்துள்ளதாக  தெரிவித்துள்ளார். இது 17- வது சட்ட விதிமுறை மற்றும் 31 - பிரிவின் கீழ் இப்படியான மோசடி, ஒரு வருடம் ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும் என்று  கூறியுள்ள அதிஷி, அதனை  தமது டிவிட்டரில் பதிவிட்டு கௌதம் கம்பீரையும்  டேக் செய்துள்ளார். அதிஷியின் குற்றச்சாட்டுக்கு, கௌதம் கம்பீர் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் கௌதம் கம்பீரின் வேட்பு மனுவைத் தள்ளு படி செய்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தேர்தல் ஆணையத்திற்கு அவர்  கோரிக்கை விடுத்துள்ளார். 

கௌதம் கம்பீர் வாக்காளர் அடையாள அட்டை விவரம்

  கடந்த மாதம் பாரதிய ஜனதா  கட்சியில் இணைந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்..கிழக்கு டெல்லியில் தொகுதியில்  போட்டியிட அறிவிக்கப்பட்ட பா.ஜ.க வேட்பாளர் மனீஷ் கிரிக்கு பதிலாக அறிவிக்கப்பட்டவர் தான்  கௌதம் கம்பீர்.அவர் மீது தற்போது  எழுந்துள்ள இந்தப் புகாரால் பா.ஜ.க-வுக்கு சிக்கலைக் கொடுத்துள்ளது .