இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவம் - முகமது சஹ்ரான் தங்கை கைது! | sister of srilankan bomb blast prime accused arrested

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/05/2019)

கடைசி தொடர்பு:20:00 (03/05/2019)

இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவம் - முகமது சஹ்ரான் தங்கை கைது!

இலங்கை

இலங்கையின் ஈஸ்டர் திருநாள் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியத் தொடர்புடைய முகமது சஹ்ரானின் தங்கை மதனியா காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். மட்டக்களப்பை அடுத்த நியூ காத்தன்குடி பகுதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டபோது மதனியாவிடமிருந்து இருபது லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பத்து நாள்கள் முன்பு சஹ்ரான் அந்தப் பணத்தைக் கொடுத்திருந்ததாகத் தெரிகிறது. 

`சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். அவர் இப்படிச் செய்வார் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. அவர் எனது உடன்பிறந்தவராக இருந்தாலும் அவர் செய்ததை வன்மையாக எதிர்க்கிறேன்', என்று முன்பொருமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார்.

சஹ்ரானின் ஓட்டுநர் கஃபூரும் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய அமைப்பான தேசிய தவுகித் ஜமாத்தையும் இலங்கை அரசு தடை செய்திருக்கிறது. இதற்கிடையே மதனியாவின் கைது, குண்டுவெடிப்பு குறித்த விசாரணையில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க