`500 நாள்கள் சிறைவாசம்!’ - மியான்மர் பத்திரிகையாளர்கள் இருவர் கருணை அடிப்படையில் விடுதலை! | myanmar's two reuters journalist released from jail today

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (07/05/2019)

கடைசி தொடர்பு:13:05 (07/05/2019)

`500 நாள்கள் சிறைவாசம்!’ - மியான்மர் பத்திரிகையாளர்கள் இருவர் கருணை அடிப்படையில் விடுதலை!

சுமார் 500 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருந்த மியான்மார் நாட்டு பத்திரிகையாளர்கள் இரண்டு பேர், அதிபரின் கருணை  அடிப்படையில் யாங்கூன் சிறையில் இருந்து இன்று விடுதலைசெய்யப்பட்டனர்.

மியான்மார்  பத்திரிகையாளர்கள்

மியான்மர் நாட்டின் அதிகார ரகசியச் சட்டத்தை மீறியதாக, அந்த நாட்டின் 'ராய்ட்டர்ஸ்' பத்திரிகையாளர்களான க்யாவ் சூ ஊ மற்றும் வா லூன் ஆகிய இருவரும் கடந்த செப்டம்பர் மாதம், 7 வருட கடுங்காவல் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பு  மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையைச் சந்தித்தது. ராய்ட்டர்ஸ் நிறுவனமும் தங்களது இரு பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக நின்றது. இதற்கிடையே, மியான்மர் தேசத்து அதிபர் வின் மிண்ட், சிறையில் இருந்து 6,200 -க்கும் மேற்பட்ட கைதிகளைக் கருணையின் அடிப்படையில் விடுதலைசெய்யும்படி உத்தரவிட்டிருந்தார். 

மியான்மர் புதுவருடப் பிறப்பையொட்டி, ஒவ்வோர் வருடமும் ஏப்ரல் 17 ல் அங்கிருக்கும் சிறைகளில் இருந்து தண்டனைக் கைதிகள்  விடுதலை செய்யப்படுவது மரபு. அதன் அடிப்படையில், இந்த வருடம் விடுதலை செய்யப்பட்டவர்களில் பத்திரிகையாளர்கள் இருவரும் அடக்கம். பத்திரிகையாளர்கள் இருவருக்கும் பலத்த ஆதரவு இருந்ததை அடுத்து, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு தெரிவித்துள்ளது. மியான்மரில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படுவதாகத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்த செயற்பாட்டாளர்கள், இந்த விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க