வரலாற்றில் முதல்முறை! - அமெரிக்காவின் 3 அழகிப் பட்டங்களையும் தட்டிச்சென்ற கறுப்பு இனப் பெண்கள் | USA's crown is Now black. Miss America,Miss Teen USA,Miss USA are all black women for the first time

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (07/05/2019)

கடைசி தொடர்பு:14:05 (07/05/2019)

வரலாற்றில் முதல்முறை! - அமெரிக்காவின் 3 அழகிப் பட்டங்களையும் தட்டிச்சென்ற கறுப்பு இனப் பெண்கள்

அமெரிக்காவில், கடந்த வாரம் 'மிஸ் அமெரிக்கா' 'மிஸ் டீன்  யு.எஸ்.ஏ', 'மிஸ் யு.எஸ்,ஏ' ஆகிய அழகிப் போட்டிகள் நடந்தன. இதில், செஸ்லி க்ரைஸ்ட் என்ற 28 வயது பெண்,  'மிஸ் யு.எஸ்.ஏ' பட்டத்தையும்,  காலே காரிஸ் என்ற 18 வயது பெண்  'மிஸ் டீன் யு.எஸ்.ஏ' என்ற பட்டத்தையும், நியா ஃபிராங்க்ளின் என்ற 25 வயது பெண்  'மிஸ் யு.எஸ்.ஏ' பட்டத்தையும் வென்றுள்ளனர். இவர்கள் மூவருமே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எனப்படும் கறுப்பினப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெண்கள்

 

ஒவ்வொரு வருடமும் மே மாதம், அமெரிக்காவில் மூன்று பட்டங்களுக்கான அழகிப் போட்டிகள் நடத்தப்படும். தற்போது டஸ்கி, டார்க் ஸ்கின் டோன் பெண்களுக்களுக்கு உலக அளவில் மாடலிங் வாய்ப்பு பரந்துவிரிந்துள்ள நிலையில், இந்த வருடம் ஒரு கறுப்பினப் பெண்தான் நிச்சயம் அமெரிக்க அழகியாக வாகை சூடுவார் என எல்லோரும் எதிர்பார்ந்திருந்தனர். ஆனால், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, மூன்று அழகிப் பட்டங்களையும் கறுப்பர் இனப் பெண்கள் தட்டிச்சென்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்கா போன்று நிறப் பாகுபாடு உள்ள நாட்டில், கறுப்பர் இனப் பெண்கள் நாட்டின் அழகிகளாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிகழ்வு உலக நாடுகளிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.1984-ம் ஆண்டு நடந்த மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியில், வெனிஸா வில்லியம்ஸ் என்ற கறுப்பினப் பெண் வாகை சூடி, அமெரிக்க வரலாற்றில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.