``தூக்கமில்லாத உலகத்துக்கு வெல்கம்'' - இளவரசர் ஹாரியை கேலி செய்த அண்ணன் வில்லியம்! | england prince Harry his wife Meghan show off their newborn son

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (08/05/2019)

கடைசி தொடர்பு:20:10 (08/05/2019)

``தூக்கமில்லாத உலகத்துக்கு வெல்கம்'' - இளவரசர் ஹாரியை கேலி செய்த அண்ணன் வில்லியம்!

ங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இளவரசர் ஹாரிக்கும் அவர் மனைவி மேகன் மார்க்கலுக்கும் இரு தினங்களுக்கு முன், ஆண் குழந்தைப் பிறந்தது. குழந்தைப் பிறந்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக வெளியிட்டதோடு, தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்ற சந்தோஷ தகவலையும் சொன்னது. இளவரசர் ஹாரியும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தனக்கு முதல் மகன் பிறந்திருக்கிற செய்தியைச் சந்தோஷத்துடன் உலகத்துக்குத் தெரிவித்தார். 

இளவரசர் ஹாரி

Pic and video courtesywww.theguardian.com

இன்று, இளவரசர் ஹாரியும் மேகனும் தங்கள் குழந்தையை வெளியுலகத்துக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது தொடர்பான வீடியோவில், மேகன், ``உலகின் சிறந்த இரண்டு ஆண்கள் என்னிடம் இருக்கிறார்கள். நான் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறேன். என் மகன் மிக அமைதியாக இருக்கிறான்'' என்று சிரித்தபடியே சொல்ல, ஹாரியோ ``அந்த அமைதி யாரிடமிருந்து வந்தது என்று தெரியவில்லையே'' என்று மனைவியைச் செல்லமாக கேலி செய்கிறார்.

தவிர, தம்பி ஹாரிக்கு குழந்தைப் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் அண்ணன் இளவரசர் வில்லியம் தன் தம்பியிடம், `தூக்கமில்லாத உலகத்துக்கு உங்களையும் வரவேற்கிறோம். அதுதான் குழந்தை வளர்ப்பு' என்று ஜோக் அடித்திருப்பதும் ராயல் தம்பதியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இளவரசன் - இளவரசியே என்றாலும் குழந்தைப் பெற்றால் இரவுகளில் நோ தூக்கம்தான் போல.