`எனக்கு நண்பனாக இருக்க முடியுமா?!' - அவசர எண்ணுக்கு அழைத்த சிறுவனுக்கு போலீஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி | Child called police emergency number and asked officer to be his friend because he was lonely

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (10/05/2019)

கடைசி தொடர்பு:16:28 (10/05/2019)

`எனக்கு நண்பனாக இருக்க முடியுமா?!' - அவசர எண்ணுக்கு அழைத்த சிறுவனுக்கு போலீஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி

குழந்தைகள் உலகம் மகிழ்ச்சியானது. அவர்களின் ராஜ்ஜியத்தில், ராஜா, மந்திரி, ஜோக்கர் எல்லாமே அவர்கள்தான். குழந்தைகளுக்கு கற்பனை உலகத்துக்குள் சிறகடித்துப் பறப்பது மிகவும் எளிது. அவர்களிடம்  ஏமாற்று, பொய், பித்தலாட்டம், சூது, வன்முறை போன்ற கயமைகள் கிடையாது. இது பெற்றோர்கள் அரவணைப்பில் வாழும் குழந்தைகளுக்குப் பொருந்தும். ஆனால், மனிதர்கள் இயந்திரங்களாக மாறிப்போன இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்காக என்ற போர்வையில் பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால், குழந்தைகள் தனிமையில் வாடும் சூழ்நிலை நிலவிவருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. 

சிறுவன்

புளோரிடா மாகாணத்தின் டல்ஹாசி போலீஸின் அவசர எண் அழைப்புக்கு நேற்று ஒரு போன் கால் வந்துள்ளது. வழக்கமாக அவசர அழைப்புக்காக ஒலிக்கும் அந்த போன் கால், இந்த முறை சற்று வித்தியாச அனுபவத்தைத் தந்துள்ளது. போலீஸ் ஆபீஸர் ஜோ வொயிட் அந்த போன்காலை எடுத்துப் பேசும்போது, மறுமுனையில் சிறுவன் ஒருவன் பேசியுள்ளான். தன் தாய்க்குத் தெரியாமல் அவசர எண்ணுக்கு அழைத்த அந்தச் சிறுவனின் இல்லத்துக்கு உடனடியாக விரைந்து வந்த போலீஸ் அதிகாரி வொயிட்டிடம், அவன் வைத்த கோரிக்கையோ வித்தியாசமானது. போலீஸ் ஆபீஸரிடம் 'தனக்கு நண்பனாக இருக்க வேண்டும்' என வித்தியாசமான கோரிக்கையை விடுத்துள்ளான் சிறுவன். 

போலீஸ் ஆபிஸர் ஜோ வொயிட்

தனிமையில் இருப்பதால், தனக்கு நண்பனாக இருக்க வேண்டும் எனச் சிறுவன் வலியுறுத்த, பொறுமையாக அதைக்கேட்ட அதிகாரி, ``எப்போதும் உனக்கு நண்பனாக இருப்பேன்" எனக் கூறி அவனை மகிழ்ச்சியாக்கியதுடன், கூடவே அவனுக்கு விலங்கு பொம்மை ஒன்றையும் பரிசாக அளித்து, அவனைத் தனது போலீஸ் வாகனத்தில் உட்காரவைத்துச் சுற்றிக்காட்டியதுடன், அந்தச் சிறுவனுடன் சில மணி நேரம் பொழுதையும் கழித்துள்ளார். அதேநேரத்தில், அவசர அழைப்புகுறித்த விளக்கத்தையும் செல்லமாகச் சொல்லியும் தந்துள்ளார் போலீஸ் அதிகாரி. இந்தச் சம்பவங்களை டல்ஹாசி போலீஸ் தனது வலைதளப்பக்கத்தில் ``எங்களுக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்திருக்கிறார்" எனப் பகிர, போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க