``அவர்கள் என் அம்மா இல்லை; ஆனாலும் ஹேப்பி மதர்ஸ் டே!''- மிச்சேல் ஒபாமாவின் நெகிழ்ச்சிப் பதிவு | Michelle Obama says mother's day wishes in her Instagram

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (10/05/2019)

கடைசி தொடர்பு:13:40 (10/05/2019)

``அவர்கள் என் அம்மா இல்லை; ஆனாலும் ஹேப்பி மதர்ஸ் டே!''- மிச்சேல் ஒபாமாவின் நெகிழ்ச்சிப் பதிவு

பாமாவின் மனைவி என்பதையும் தாண்டி, மிச்சேல் தனிப்பட்ட முறையிலும் நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நாளை மறுநாள் (மே 12-ம் தேதி) வரவிருக்கும் அம்மாக்கள் தினத்துக்காக, தன் அம்மாவைத் தவிர்த்து தன் வாழ்க்கையில் நேசித்த, மதித்த சில பெண்களைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பதிவு மிச்சேல் மீதான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. இதோ, அதன் சுருக்கம். 

மிச்சேல் ஒபாமா

``இதோ, வரும் ஞாயிறன்று அம்மாக்கள் தினத்தைக் கொண்டாடுவதற்காக நாமெல்லாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நான் சில பெண்களைப் பற்றிப் பகிர விரும்புகிறேன். அவர்கள் என் அம்மாக்களாக இருந்ததில்லை. ஆனால், நாங்கள் வளர்ந்ததில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. என்னைச் சுற்றியும் என் அம்மாவைச் சுற்றியும் இருந்த வலிமையான, புத்திசாலியான, அன்பான இதயம் கொண்ட பெண்கள்தான் என்னை இப்படி உருவாக்கியவர்கள். மென்மை மிகுந்த பேச்சைக் கொண்ட என் பாட்டி லவானிடம் ( LaVaughn ) இருந்து பொறுப்புணர்வைக் கற்றுக் கொண்டேன். என் ஆன்ட்டி ராபி (Robbie)யிடம் பியானோவை மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. கடின உழைப்பின் முக்கியத்துவத்தையும் அதற்கு என்னை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கற்றுக் கொண்டேன். நான் அவரைத் தேடிய தருணங்களில் எல்லாம் அவர் என்னுடன்தான் இருந்தார். அடுத்து என்னுடைய மென்டார் ஸெர்னி (Czerny) என்னுடைய இன்றைய நிலைமையைச் சாத்தியப்படுத்தியவர். 

அடுத்து நான் சொல்லப் போகிறவர், எலனார் கேய் வில்சன் (Eleanor Kaye Wilson). இவரை நாங்கள் `மம்மா கேய்' என்று செல்லமாக அழைப்போம். இனிமையான இதயமும் ஆழமான அன்பும் கொண்ட மனுஷி இவர். எனக்கு, என் கணவருக்கு, என் மகள்களுக்கு இரண்டாவது அம்மா அல்லது பாட்டி என்றுதான் சொல்வேன். அவர் எங்களின் சாப்பாட்டு நேரம், கைவினை நேரம் என்று எங்களுடைய எல்லாத் தருணங்களிலும், எங்களுடன் பல வருடங்களாக இருந்து வருபவர். மிக அருமையான தோழியான இவரைப் போலவே மற்ற உதவியாளர்களையும் நாங்கள் நேசிக்கிறோம். என் வாழ்க்கையில் இருக்கிற பெண்களைப் போலவே உங்கள் வாழ்க்கையில் இருக்கிற பெண்களின் மீது வரும் `அம்மாக்கள் தினத்தன்று' கூடுதலாக அன்பு மழை பொழியுங்கள். எப்போதும் பொழியுங்கள்.''

ஹேப்பி மதர்ஸ் டே மிச்சேல்.