`விநோத நோய், படிப்பில் டாப் ரேங்க்! - பேத்தியின் கனவுகளைச் சுமக்கும் ஆச்சர்ய பாட்டி | China Girl Thanks to her Grand mother

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (10/05/2019)

கடைசி தொடர்பு:15:02 (10/05/2019)

`விநோத நோய், படிப்பில் டாப் ரேங்க்! - பேத்தியின் கனவுகளைச் சுமக்கும் ஆச்சர்ய பாட்டி

சீனா

Photo Credit: People's Daily, China

பேத்தி என்றாலும் நீயும் என் தாயே.... இந்தப்பாடல் வரிகளைப்போல சீனாவைச் சேர்ந்த Zhang Ruixin உடல்நலக்குறைவால் அவதியுறும் தனது பேத்தி Liu Xuannuo கவனித்து வருகிறார். சாங்கின் பேத்தி லியூ 18 மாத குழந்தையாக இருந்த போது amyotrophic lateral sclerosis என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயானது தசைகளை வலுவிழக்கச் செய்யும் மற்றும் உடல் செயல்பாடுகளை பலவீனப்படுத்தும். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் இது குணப்படுத்த முடியாத நோய், 3 வயதுக்குப் பிறகு வாழ்க்கையே சிரமமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மருத்துவச் செலவுக்காக பெற்றோர்கள் உழைக்க லியூவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவரது பாட்டியான சாங்க் ஏற்றுக்கொண்டார். கடந்த 10 வருடங்களாக லியுவின் அன்றாடத் தேவைகளை கவனித்து வருகிறார்.

பேத்தி

Photo Credit: People's Daily, China

மற்ற குழந்தைகளைப் போல லியூ பள்ளிக்கூடத்திற்குச் சென்று வருகிறார். தனது பேத்திக்கு எந்தக் கவலையும் இல்லாமல் கவனித்து வருகிறார் சாங்க். லியுவின் அன்றாடப்பணிகளை இவர்தான் கவனித்து வருகிறார். தினமும் மூன்று மணிநேரமே உறங்கும் சாங்க் பேத்திக்கு உணவு தயாரிப்பது, ஆடைகளை மாற்றுவது, அன்றாடப்பணிகளுக்கு அழைத்துச் செல்வது, பள்ளிக்குச் செல்வது என அனைத்தையும் இவரே கவனித்து வருகிறார். பேத்தியைத் தூக்கிக்கொண்டு பள்ளி செல்லும் சாங்க். இவ்வளவு கடினமான சூழலிலும் லீயு கல்வியில் சிறந்து விளங்கி ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெறுகிறார். அவரது உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தாலும் விடாமுயற்சியுடன் கல்வி கற்று வருகிறார். நோயின் காரணமாக லீயு மற்ற குழந்தைகளை போல் வேகமாக எழுத முடியவில்லை. இதன்காரணமாக கல்வி கற்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கிறார். தனது கடின உழைப்பால் பள்ளித் தேர்வுகளில் டாப் ரேங்கில் தேர்ச்சி பெற்றுவருகிறார். 

இதுகுறித்து சீன ஊடகத்திடம் பேசியுள்ள  சாங்க், “ எனது பேத்தி அவரது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு எல்லைக்குள் சுருங்கிவிடக் கூடாது. அற்புதமான இயற்கை காட்சிகளை ரசிக்க வேண்டும். வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்'' என்கிறார். `என் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நான் மகிழ்ச்சியுடன் கடக்கிறேன்' என்கிறார் லியூ.  இவர்களுடைய பயணம் மகிழ்ச்சியோடு தொடரட்டும்.  இதுபோன்ற பாட்டி கிடைப்பதும் வரமே..