`மோடி எப்படிப்பட்ட தலைவர்?' - `டைம்ஸ்’ வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | times put PM modi on cover and calls him 'divider in chief'

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (10/05/2019)

கடைசி தொடர்பு:16:00 (10/05/2019)

`மோடி எப்படிப்பட்ட தலைவர்?' - `டைம்ஸ்’ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மோடி

ந்த இதழ் டைம்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பிரபலங்கள் பிரபல சர்வதேசப் பத்திரிகைகளில் இடம்பெறுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்றாலும் அவர் குறித்தான கவர் ஸ்டோரியில் அந்தப் பத்திரிகை எடுத்திருக்கும் நிலைப்பாடு விவாதிக்கத்தக்க வகையிலாக அமைந்துள்ளது. பொதுத் தேர்தலில் இன்னும் இரண்டுகட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் ‘பிரிவினைவாதிகளின் தலைவர்’ என்று பிரதமர் மோடியைத் தனது பத்திரிகை அட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். “பிரபலங்களுக்கு அடிபணிந்துபோன ஜனநாயகங்களில் முதன்மையாக இந்தியா இருக்கும். மோடியின் கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் இந்தியா பல வகைகளில் பிரிந்து கிடக்கிறது. மாட்டுக்கறிப் படுகொலைகள், 2017-ல் யோகி ஆதித்யநாத்தை உத்தரப்பிரதேச முதல்வராக அறிவித்தது, அண்மையில் சாத்வி பிரக்யாவை வேட்பாளராக அறிவித்தது எனப் பல நெகடிவ் அம்சங்கள் ஆட்சி குறித்து குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளையும் வலுவிழந்த ஒன்றாக அந்தக் கட்டுரைச் சித்திரிக்கிறது. மோடி பிரதமரான ஒரு வருடத்தில் 2015-ல் அவரது பேட்டி ஒன்றை வெளியிட்ட டைம்ஸ் பத்திரிகை அவரை `டைம்ஸ் டாப் 100 மனிதர்கள்’ பட்டியலிலும் சேர்த்தது. தற்போது தலைகீழாகக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பாகி இருக்கிறது. மேலும், அதே பத்திரிகையின் மற்றொரு கட்டுரையில் மோடியை மிகச் சிறந்த பொருளாதாரச் சீர்திருத்தவாதி என்றும் அந்தப் பத்திரிகை சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க