இங்கிலாந்தின் புகழ்பெற்ற நிறுவனத்தை விலைக்கு வாங்கும் முகேஷ் அம்பானி! | Reliance to acquire British Hamleys

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (10/05/2019)

கடைசி தொடர்பு:19:30 (10/05/2019)

இங்கிலாந்தின் புகழ்பெற்ற நிறுவனத்தை விலைக்கு வாங்கும் முகேஷ் அம்பானி!

ஹம்லேஸ், 1760-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகின் மிகப் பழைமையான பொம்மைகள் விற்பனையகமாகும். தற்போது சர்வதேச அளவில் 18 நாடுகளில் 167 கிளைகளுடன் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்துடன் ஏற்கெனவே ஃப்ரான்சஸி ஒப்பந்தம் செய்து, இந்தியாவின் 29 நகரங்களில் அமைந்துள்ள இந்த விற்பனையகத்தின் 88 கிளைகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. தற்போது முழுமையாக அந்த நிறுவனத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், இங்கிலாந்தின் புகழ்பெற்ற, 259 ஆண்டுகள் பழைமையான ஹம்லேஸ் பொம்மைகள் சில்லறை விற்பனையகத்தை கையகப்படுத்துகிறது. ஹம்லேஸ் நிறுவனத்தை 2015-ல் வாங்கியிருந்த சீனாவின் சி பேனர் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து ரூ.620 கோடிக்கு தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கைமாறுகிறது. இந்த தொழில் முயற்சி, உலகளாவிய சில்லறை விற்பனைத்துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தை முன்னணிக்குக் கொண்டுவரும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தர்ஷன் மேத்தா கூறியுள்ளார்.

ஹம்லேஸ்

ஹம்லேஸ், 1760-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகின் மிகப்பழைமையான பொம்மைகள் விற்பனையகமாகும். தற்போது சர்வதேச அளவில் 18 நாடுகளில் 167 கிளைகளுடன் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்துடன் ஏற்கெனவே ஃப்ரான்சஸி ஒப்பந்தம் செய்து, இந்தியாவின் 29 நகரங்களில் அமைந்துள்ள இந்த விற்பனையகத்தின் 88 கிளைகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. தற்போது முழுமையாக அந்த நிறுவனத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது.

முகேஷ் அம்பானி

ஹம்லேஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் 9.2 மில்லியன் பவுண்டுகள் நஷ்டத்தைச் சந்தித்தது. பிரக்ஸிட் பிரச்னை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்த விற்பனைச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த விற்பனையகத்தை கைமாற்றிவிடத் தீர்மானித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் ரிலையன்ஸ் நிறுவனம், இந்த விற்பனையகத்தை லாபகரமான பாதைக்கு மாற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.