`காது வலிக்கு, டாக்டர் பரிசோதித்தபோது நடந்த அதிர்ச்சி!'- வைரலான வீடியோ | Tiny spider builds a nest in man’s ear

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (11/05/2019)

கடைசி தொடர்பு:11:44 (11/05/2019)

`காது வலிக்கு, டாக்டர் பரிசோதித்தபோது நடந்த அதிர்ச்சி!'- வைரலான வீடியோ

கடந்த சில நாள்களாக, அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு சீன வீடியோ சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்துள்ளது.

சிலந்தி

சீனாவின் ஜியான்சூ என்ற மாகாணத்தில் உள்ள லி என்பவருக்கு, சில நாள்களாகவே ஒரு காதில் எரிச்சல், வலி மற்றும் அரிப்புபோன்ற பிரச்னைகள் இருந்துள்ளன. தூய்மையில்லாத காரணத்தினால்தான் இந்த தொல்லை உள்ளது என நினைத்த அவ,ர் தன் காதுகளை சுத்தப்படுத்தியுள்ளார். இருந்தும் அரிப்பு மற்றும் எரிச்சல் நிற்கவில்லை. ஒரு நாள் அதிக அரிப்பு ஏற்படவே, ஜியான்சூவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

சிலந்தி

அங்கு, லி-யை பரிசோதித்த டாக்டர்கள், அவரது காதில் எதுவும் இல்லை என முதலில் கூறியுள்ளனர். அதன்பின்னரும் அவருக்கு அரிப்பு ஏற்படவே, அவரது காதுக்குள் மைக்ரோஸ்கோப் மூலம் டாக்டர் சோதனை செய்தார். அப்போது, அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. லி-யின் காதில் வித்தியாசமாக ஏதோ உள்ளதை முதலில் பார்த்தார். மேலும், பரிசோதனை செய்தபோது காதுக்குள் சிறிய சிலந்தி இருப்பது தெரியவந்துள்ளது. காதில் சிலந்தி இருந்தது மட்டுமில்லாமல், அது லி-யின் காதினுள் வலை பின்னியும் வாழ்ந்து வந்துள்ளது. 

பிறகு, லி-யின் காதுக்குள் உப்பு கலந்த நீரை சில துளிகள் ஊற்றியுள்ளார் டாக்டர்.  அதைத் தாங்கமுடியாத சிலந்தி, உயிருடன்  வெளியில் வந்துள்ளது. லி-யின் காதில் சோதனை செய்யப்பட்ட வீடியோ பதிவு, இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.