``மீண்டும் நானே அதிபர் ஆவேன்!” - வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப் | Trump had asked China to act immediately and strike a trade deal without waiting

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (13/05/2019)

கடைசி தொடர்பு:14:40 (13/05/2019)

``மீண்டும் நானே அதிபர் ஆவேன்!” - வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப்

ட்ரம்ப்

டந்த ஆண்டின் மத்தியிலிருந்தே அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தீவிரமான வர்த்தகப்போர் நடந்துகொண்டிருக்கிறது. எப்போது முடியும் இந்த வர்த்தகப்போர் என மற்ற நாடுகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இருநாட்டின் தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகின. உலகின் பெரும் பொருளாதாரம் கொண்ட இரு நாடுகளுக்கு இடையில் நடந்த இந்த வர்த்தகப் போரினால் மற்ற நாடுகளிலும் அச்சம் நிலவியது. இந்தியாவின் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துக்கும் இந்த வர்த்தகப் போர் ஒரு காரணியாக அமைந்தது.

ட்ரம்ப்

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்துப் பேசி இந்த வர்த்தகப் போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தனர். அத்துடன் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தகப் போருக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை அமெரிக்காவில் தொடங்கியது. தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையும் எந்த ஓர் ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது. இதைத் தொடர்ந்து, ``அமெரிக்காவுடன் இப்போதே வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துகொண்டால் உண்டு, இல்லையென்றால் 2020-ம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகி விடும்" என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சமீபத்தில் இதுபற்றி அவர் பேசியபோது, ``வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையை அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை இழுத்தடிக்கலாம் என்று சீனா அரசு நினைக்கிறது. தேர்தலில் ஜனநாயகக் கட்சி வென்றால், அமெரிக்காவில் இருந்து, அதிகமான சலுகைகளை அனுபவித்துக்கொள்ளலாம் என அவர்கள் கனவுக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது பலிக்காது. ஏனெனில், மீண்டும் நானேதான் ஜனாதிபதியாகப் போகிறேன். அப்போது ஒப்பந்தம் செய்தால் இன்னும் மிகமிக மோசமான விளைவுகளைச் சீனா சந்திக்க வேண்டியிருக்கும். அதனால், இப்போதே ஒப்பந்தம் செய்தால் அவர்களுக்கு நல்லது" என்று எச்சரிக்கை வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.