‘இலங்கையில் மீண்டும் சமூக வலைதளம் முடக்கம்?’ - காரணம் என்ன... | sri Lanka blocks social media platforms after Muslim shops, mosques attacked...

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (13/05/2019)

கடைசி தொடர்பு:16:20 (13/05/2019)

‘இலங்கையில் மீண்டும் சமூக வலைதளம் முடக்கம்?’ - காரணம் என்ன...

இலங்கை குண்டு  வெடிப்பு

 

   இலங்கையில், ஈஸ்டர் தினத்தன்று அங்குள்ள தேவாலயங்களில் குண்டுகள் வெடித்ததில் 300 - க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், தொடர்ந்து கைது நடவடிக்கை, விசாரணை என அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று மாலையில் சிலாபம், பிங்கிரி, குளியாப்பிட்டி போன்ற இடங்களில்  கலவரம் ஏற்பட்டுள்ளது. 

இலங்கை

இதுகுறித்து அங்குள்ள பத்திரிகையாளர் ஸ்ரீகாந்த் பேசுகையில், "நேற்று  நடந்த இந்தக்  கலவரத்தால் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள மசூதி மற்றும் வணிகத் தளங்களில்  கலவரம் ஏற்பட்டது. குறிப்பாக சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்ட சர்ச்சையான கருத்தைத் தொடர்ந்து இந்தக்  கலவரம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, சமூக வலைதளமான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ,ட்விட்டர் போன்றவற்றை  முடக்க இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் கருத்தைப் பதிவுசெய்ததாக அப்துல் ஹமீத் முகமது ஹாசார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர் " என்றார்.