மேகன் மார்கில் மகன் ஆர்ச்சிக்கு இந்தியாவிலிருந்து சென்ற `ஸ்பெஷல்' பரிசு! | Meghan Markles son Archie gets a special gift from India

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (14/05/2019)

கடைசி தொடர்பு:20:50 (14/05/2019)

மேகன் மார்கில் மகன் ஆர்ச்சிக்கு இந்தியாவிலிருந்து சென்ற `ஸ்பெஷல்' பரிசு!

லகமெங்கிலுமிருந்து வாழ்த்துகளை அள்ளிக்கொண்டிருக்கும் மேகன் மார்கில், இந்தியாவிலிருந்தும் பிரேத்யேகப் பரிசைப் பெற்றிருக்கிறார். பல தடைகளை உடைத்து, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் சார்லஸ் - டயானா தம்பதியின் இளைய மகனான பிரின்ஸ் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்கிலை சென்ற வருடம் மணந்தார். ட்விட்டர் முதல் இன்ஸ்டாகிராம் வரை அனைத்துச் சமூக வலைதளங்களும் இவர்களின் திருமணம் முதல் உலகச் சுற்றுலா வரை ஒவ்வொரு பயணத்தையும் பின்தொடர்ந்து பதிவு செய்தது. உலகளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் மேகன் மார்கில், கடந்த மே 6-ம் தேதி ஓர் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். குழந்தைக்கு ஆர்ச்சி ஹாரிசன் எனப் பெயர் சூட்டப்பட்டது.

மேகன் மார்கில்

இந்நிலையில், மும்பையின் டப்பாவாலாஸ் (Dabbawalas) சங்கம், பிரேத்யேகமான மகாராஷ்ட்ரிய வெள்ளி அணிகலன்களைப் பரிசாக அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மும்பை பத்திரிகையாளர்களிடம் பேசிய டப்பாவாலாஸ் சங்கத்தின் தலைவர் சுபாஷ் தலேகர், ``பிரின்ஸ் சார்லஸ் எங்களின் நண்பர். அவர் தாத்தா ஆகியிருக்கிறார் என்றால் நாங்களும் தாத்தா ஆகியிருக்கிறோம். பேரக்குழந்தைகளுக்குப் பரிசு வழங்குவது மராத்திய கலாசாரம்" என்று கூறியுள்ளார்.

Dabbawalas

2003-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிரின்ஸ் சார்லஸ், மும்பையிலுள்ள டப்பாவாலாக்களை முதல்முதலில் சந்தித்துப் பேசினார். அன்று முதல், அரச குடும்பத்தின் அனைத்து விழாக்களையும் இவர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். மேகன் மார்கில் - ஹாரியின் திருமணத்திற்குக்கூட மகாராஷ்ட்ரிய திருமண உடைகளை இவர்கள் பரிசாக அனுப்பியுள்ளனர்.