`தேம்பி அழுகிறான், மாஸ்டர் ஐடியா கொடுக்கிறார்!'- சிறுவன்விட்ட `கிக்`ஆல் உடைந்தது பலகை | This Viral video improves our positive

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (15/05/2019)

கடைசி தொடர்பு:14:30 (15/05/2019)

`தேம்பி அழுகிறான், மாஸ்டர் ஐடியா கொடுக்கிறார்!'- சிறுவன்விட்ட `கிக்`ஆல் உடைந்தது பலகை

ண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமக்கெல்லாம் அழகாகச் சொல்லித் தருகிறது ஒரு வீடியோ. அதனாலேயே, இது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 

சிறுவன் விட்ட `கிக்`கால் உடைந்தது பலகை

ஒரு கராத்தே கிளாஸ். ஐந்து வயது சிறுவன் ஒருவனை மரப்பலகை ஒன்றை காலால் உடைக்கச் சொல்கிறார், கராத்தே மாஸ்டர். அந்தச் சிறுவன், அந்த மரப்பலகையை பல தடவை உதைக்கிறான்; உடைக்க முயல்கிறான்... ஆனால், முடியவில்லை. ஒருமுறை முயலும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறான் சிறுவன். ஆச்சர்யம், ஆனால் உண்மை. அவன் விழுந்ததைப் பார்த்து அவன் நண்பர்கள் யாருமே சிரிக்கவில்லை. உடன் பயிலும் சிறுவன் ஒருவன் கீழே விழுந்த தன் நண்பனைத் தூக்கி விடுகிறான். மறுபடியும் மறுபடியும் தன் மாஸ்டர் கைகளில் இருக்கிற மரப்பலகையை உடைக்க முயற்சி செய்கிறான். முடியவில்லை.

ஒரு கட்டத்தில் தன்னால் இந்தப் பலகையை உடைக்க முடியாது என்று நினைத்து அந்தச் சிறுவன் அழ ஆரம்பித்து விடுகிறான். உடனே அந்த மாஸ்டர், பலகையை முன்னங்காலால்  அல்ல, குதிங்காலால் உதை என்று சொல்லித் தருகிறார். தவிர, அவனைச் சுற்றி இருக்கிற அவன் நண்பர்கள் அவன் பெயரைச் சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள். அவ்வளவுதான், ஒரு கிக்; மாஸ்டரின் கைகளில் இருக்கிற மரப்பலகை இரண்டுத் துண்டுகளாக உடைகிறது. மாஸ்டர் துள்ளிக்குதித்துக் கொண்டாடுகிறார். சிறுவன் தன்னம்பிக்கையுடன் சிரிக்கிறான். அவன் நண்பர்கள் அவனைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள். தங்கள் நண்பனின் தோல்வியைப் பார்த்து சிரிக்காதவர்கள் அவனை வெற்றியை சிரித்துக் கொண்டாடுகிறார்கள். இந்த வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.....!