`கருத்தரிப்பது ஒரு நோயல்ல என நிரூபிக்கவே 2 வது குழந்தை பெற்றேன்!' - ஸ்பான்சரை நிறுத்தியதால் பொங்கிய வீராங்கனை | ''Women can be a mother and still have a successful career'' says Olympian Alysia montano

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (15/05/2019)

கடைசி தொடர்பு:17:20 (15/05/2019)

`கருத்தரிப்பது ஒரு நோயல்ல என நிரூபிக்கவே 2 வது குழந்தை பெற்றேன்!' - ஸ்பான்சரை நிறுத்தியதால் பொங்கிய வீராங்கனை

த்தனை சாதனைகள் செய்தாலும், எத்தனை தடவை தங்களை நிரூபித்தாலும், 'பெண்கள் கர்ப்பமாகிவிட்டால் வேலைக்கு அன் ஃபிட் ஆகிவிடுவார்கள்' என்கிற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. இதற்கு ஷூக்களுக்குப் புகழ்பெற்ற நைக் பிராண்டும் விதிவிலக்கு இல்லை போலும். அமெரிக்காவின் அலிசியா மோன்டானோ என்ற ஓட்டப் பந்தய வீராங்கனைக்கு குழந்தை பிறந்த பிறகு மெட்டர்னிட்டி விடுமுறையில் இருந்தபோது, அலிஷியாவுக்குதான் அளித்து வந்த ஸ்பான்சர் கான்ட்ராக்டை சஸ்பெண்டு செய்ததோடு அவருக்குத் தர வேண்டிய பணத்தையும் நிறுத்தி வைத்திருக்கிறது நைக். 

அலிஷியா தன் முதல் குழந்தையுடன்

PC: hips.hearstapps.com

பொங்கி எழுந்த அலிசியா மோன்டானோ, ''நான் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவள். நேஷனல்  லெவல் சாம்பியன், உலகளவில் முதல் மூன்று ஓட்டப்பந்தய வீராங்கனைகளில் நானும் ஒருத்தி. ஓட்டப்பந்தய வீராங்கனையாகவும் அம்மாவாகவும் இருப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. குழந்தை பெற்றால் நைக் ஸ்பான்சர் ஷிப்பை சஸ்பெண்டு செய்யும்; அமெரிக்காவின் ஒலிம்பிக் கமிட்டியோ மெட்டர்னிட்டி விடுமுறையில் இருக்கும்போது, நாட்டின் முக்கியமான ஓட்டப்பந்தயங்களில் பிரகாசிக்கவில்லை என்று ஹெல்த் இன்ஷூரன்ஸிலிருந்து நீக்கிவிடும். இதனால், என் முதல் குழந்தை பிறந்த பலவீனத்திலிருந்து பச்சிளம் குழந்தையைப் பராமரிப்பதற்கு எத்தனை கஷ்டப்பட்டேன் தெரியுமா?

கர்ப்பமாக இருந்ததால் என்னுடைய சக ஓட்டப்பந்தய வீராங்கனைகளின் ஸ்பான்சர் பணம் குறைக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. கருத்தரிப்பது ஒரு நோயல்ல என்று நிரூபிப்பதற்காகத்தான், நான் என் இரண்டாவது குழந்தையைக் கருத்தரித்து இருந்தபோதும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டேன். ஒரு பெண் அம்மாவாக ஆனாலும் தன் வேலையில் வெற்றி பெற முடியும். கருத்தரிப்பதை காயம் அடைந்ததைப்போல கருதுவதை எப்போது நிறுத்தப்போகிறீகள்'' என்று கேள்வி எழுப்புகிறார் அனிசியா.

ஓட்டப்பந்தய வீராங்கனைகளுக்கும் பேறுகால விடுமுறை இருக்கிறதுதானே..?