`அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணம்’ - அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாக கடந்து சாதித்த இந்தியப் பெண்! | Aarohi Pandit became the world’s first woman to cross the Atlantic Ocean

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (16/05/2019)

கடைசி தொடர்பு:09:25 (16/05/2019)

`அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணம்’ - அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாக கடந்து சாதித்த இந்தியப் பெண்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஆரோஹி பண்டிட் (Aarohi Pandit) மற்றும் இவரின் தோழி கெய்தர் மிஷ்குய்டா (Keithair Misquitta) ஆகிய இரு பெண்களும் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் என்ற பயணத்தின் கீழ் கடந்த வருடம் மஹி என்ற சிறிய ஸ்போர்ட்ஸ் விமானத்தின் மூலம் உலகைச் சுற்றத் தொடங்கியுள்ளனர்

ஆரோஹி

PC :  instagram/ @aarohi pandit

இவர்கள் முதலாவதாக பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் வழியாக பாகிஸ்தான் சென்றுள்ளனர். அங்கிருந்து பிற உலகநாடுகளையும் தொடர்ந்து சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் ஆரோஹி பண்டிட், கடந்த 13-ம் தேதி நள்ளிரவு ஸ்காட்லாந்தின் விக் (wick) விமான நிலையத்தில் தன் பயணத்தைத்தொடங்கி கிரீன்லாந்து வழியாக 14-ம் தேதி காலை ஐஸ்லாந்து வந்து சேர்ந்துள்ளார். சுமார் 3,000 கிலோ மீட்டர்கள் வரை மோசமான பனிப்பாறைகள் கொண்ட அட்லாண்டிக் பகுதியை தனி ஆளாக கடந்துள்ளார் ஆரோஹி. இதன்மூலம் அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாக கடந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஆரோஹி பண்டிட். 

அட்லாண்டிக்கை கடந்த ஆரோஹி

இதுமட்டுமல்லாது கிரீன்லாந்தின் ஆபத்தானப் பகுதிகளுக்கு மேல் தனி ஆளாகப் பறந்த முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். ஆரோஹி. புல்லட் மோட்டார் சைக்கிளுக்கு இணையான சுமார் 400 கிலோ எடைகொண்ட ஒற்றை இன்ஜின் உடைய சினுஸ் (sinus) 912 என்ற விமானத்தில் இந்த இரு பெண்களும் உலகைச் சுற்றி வந்துள்ளனர். மேலும் இவர்கள் கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு ஜூலை 30-ம் தேதி இந்தியா திரும்பவுள்ளனர். இருவரும் இந்தியா திரும்புவதற்கு முன்பாக இன்னும் பல சாதனைகளைப் படைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரோஹி பண்டிட்டின் இந்தச் சாதனை அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மட்டுமல்லாது மொத்த இந்தியர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  

கிரீன்லாந்து

இந்தச் சாதனை குறித்து பேசியுள்ள ஆரோஹி, ``என் நாட்டுக்கும் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் பெண்களுக்காகவும் நான் இதை சமர்ப்பிக்கிறேன். அட்லாண்டிக் பகுதியைக் கடந்தது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அட்லாண்டிக் கடலின் மேல் பறக்கும்போது ஒரு பறவையைப்போல் உணர்ந்தேன். அடர்த்தியாகக் கருமை நிற கடலுக்கும் நீல நிற வானத்துக்கும் இடையில் பறந்தது மிகவும் சிறந்த, வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். 

 ஆரோஹி

1932-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த அமேலியா இயர்ஹார்ட்  (Amelia Earheart) என்ற பெண் உலகிலேயே முதன்முதலில் தனியாக விமானத்தில் பறந்து சாதனை படைத்துள்ளார். அவரால் ஈர்க்கப்பட்ட ஆரோஹியும் தனியாக விமானத்தில் பறக்க ஆர்வம் கொண்டு தற்போது உலக சாதனை படைத்துள்ளதாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.