பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க மறுப்பு: பங்களாதேஷ் அதிரடி!  | Bangladesh halts visas for Pakistani nationals amid diplomatic impasse 

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (21/05/2019)

கடைசி தொடர்பு:16:25 (21/05/2019)

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க மறுப்பு: பங்களாதேஷ் அதிரடி! 

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை இஸ்லாமாபாத்திலுள்ள பங்களாதேஷ் தூதரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே தூதரக ரீதியிலான புதிய மோதல் ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை இஸ்லாமாபாத்திலுள்ள பங்களாதேஷ் தூதரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே தூதரக ரீதியிலான புதிய மோதல் ஏற்பட்டுள்ளது. 

விசா வழங்குவதில் மோதல்

1971-ம் ஆண்டு நடந்த பங்காளதேஷ் விடுதலைப் போரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட போர்க் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது எனக் கடந்த 2013-ம் ஆண்டு பங்களாதேஷ் முடிவு செய்தது. அப்போதிருந்தே பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே முறுகலான நிலை நீடித்து வருகிறது. 

இதன் உச்சக்கட்டமாகத்தான் கடந்த ஆண்டு, பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு விசா வழங்க பங்களாதேஷ் மறுத்தது. இந்த நிலையில், பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை இஸ்லாமாபாத்திலுள்ள பங்களாதேஷ் தூதரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மே 13-ம் தேதி முதல் தூதரக அலுவலகத்தில் செயல்பட்டு வந்த விசா கவுன்டர் மூடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தங்களின் இந்த நடவடிக்கையை, பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு அடையாளமாகக் கொள்ளலாம் என்று பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் டாக்காவிலுள்ள அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. 

1971-ம் ஆண்டு போர்

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், பங்களாதேஷ் நாட்டுக்கான தனது தூதரக அதிகாரியாக சாக்லெய்ன் செய்யத் என்பவரை நியமிக்க முடிவு செய்த நிலையில், அவர் தங்கள் நாட்டில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதாக குற்றம் சாட்டி அவரை ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, எதுவும் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க