இங்கு மட்டும்தான் நடுரோட்டில் ஏரோப்ளேன் ஓடும்... சுவாரஸ்யங்கள் நிறைந்த குட்டி நாடு! #MyVikatan | Gibraltar

வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (27/05/2019)

கடைசி தொடர்பு:15:39 (27/05/2019)

இங்கு மட்டும்தான் நடுரோட்டில் ஏரோப்ளேன் ஓடும்... சுவாரஸ்யங்கள் நிறைந்த குட்டி நாடு! #MyVikatan

ரயில்வே கேட் என்றால் எல்லோருக்கும் தெரியும். ரயில் வண்டி வரும்போது இந்த கேட் அடைக்கப்பட்டிருக்கும். நாமும் ரயில் போகும் வரை காத்திருப்போம். இதுபோலத்தான், ஏரோப்ளேன் கேட். 

Gibraltar

 ஆச்சர்யமாக இருக்கிறதா... அந்த ஊரில் விமான நிலையம் அமைக்க வேறு இடமே இல்லையா. ஏன் விமான ஓடு தளத்திற்கு அருகே சாலையையும் வைத்து, விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் கேட் போட்டு சாலையை மூட வேண்டும்... இது எந்த நாட்டில் இருக்கிறது... என்கிறீர்களா?

முதலில் அந்த நாட்டின் வரைபடத்தைப் பாருங்கள். அப்போதுதான் அவர்களின் நிலம் சார்ந்த பிரச்னை உங்களுக்குத் தெரியவரும்.

ஜிப்ரல்டார்

பிரிட்டிஷ் காலனியின் ஆதிக்கத்தில் இன்றும் உட்பட்டுள்ள ஜிப்ரல்டார் ( Gibraltar) என்ற நாடுதான் அது. எவ்வளவு சிறிய நாடு என்று பார்த்தீர்களா... நம் நாட்டைப் போல இதுவும் தீபகற்பம்தான். மூன்று பக்கம் கடலும், வடக்குப் பக்கம் நிலமும் அமைந்துள்ளது. இந்த சிறிய நிலப்பரப்பில் சாலை, ரயில் நிலையம், விமான நிலையம் என அனைத்தையும் வைக்க வேண்டிய நிலை உள்ளதால்தான், இவ்வாறு அமைத்துள்ளார்கள்.

ஜிப்ரல்டார்

ஸ்பெயின் நாட்டின் தெற்கேதான் இந்தச் சிறிய நாடு அமைந்துள்ளது. ஏறத்தாழ 30,000 பேர் வாழும் இந்த நாட்டின் பரப்பளவு, 6.8 சதுர கிலோமீட்டர்கள். பூர்விக மொழியாக 'லியானிட்டோ'(Llanito) இருந்தபோதிலும், ஸ்பானிஷ் மொழி பரவலாகவும், ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் பேசப்படுகின்றன.

ஜிப்ரல்டார்


பறப்பதற்குப் பல சிக்கல்கள் இருப்பதால், வாரத்திற்கு 30 சர்வீஸ்கள் மட்டுமே உண்டு. அதுவும் UK -வுக்குதான் அதிகம்.

ஜிப்ரல்டார்

50 கிலோமீட்டர் தூரத்திற்கு ஜிப்ரால்டர் மலைப்பகுதியில் ஒரு சுரங்கப்பாதையும் உண்டு.

ஜிப்ரல்டார்

மிகவும் இன்ட்ரஸ்டிங்கான விஷயம் என்னவென்றால், ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதில் உள்ள மொராக்கோ நாட்டுக்கும் இந்த நாட்டுக்கும் கடலுக்கடியே நீண்ட சுரங்கப்பாதை இருப்பதாகவும், அதன்மூலம் ஆதிமனிதர்கள் இங்கு வந்து ஐரோப்பா முழுவதும் வியாபித்ததாகவும் ஒரு கதை நிலவிவருகிறது. இந்த விடுமுறைக்கு ஜிப்ரால்டர் நாட்டுக்கு ஒரு ட்ரிப் போயிட்டு வரலாமே!

செய்தி : ஜேசு ஞானராஜ்