அமெரிக்கா விசா வேணுமா... - அப்போ 5 வருஷ ஹிஸ்டரி இனி அவசியம்! | US visas will have to submit their social media details under new rules

வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (02/06/2019)

கடைசி தொடர்பு:17:09 (02/06/2019)

அமெரிக்கா விசா வேணுமா... - அப்போ 5 வருஷ ஹிஸ்டரி இனி அவசியம்!

அமெரிக்க விசா பெற புதிய விதி ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.

விசா

அமெரிக்காவுக்குச் சென்று படிக்க வேண்டும், அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் என்பது இந்தியர்கள் பலரின் கனவாக இருந்து வருகிறது. இதற்கு உதாரணம் கூறவேண்டும் என்றால்  உலக அளவில் வருடத்துக்கு 1.47 கோடி மக்களுக்கு அமெரிக்கா விசா வழங்கி வருகிறது. இதில் கடந்த வருடம் மட்டும் இந்தியர்கள் 8.72 லட்சத்துக்கும் மேலானோர்க்கு அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளன. இப்படி நாளுக்குநாள் அமெரிக்க விசா பெற விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே ஹெச்-1பி  விசாவுக்கான பிரச்னைகள் முடிந்து புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து விதமான அமெரிக்க விசா பெறுவதற்கும் புதிய விதி ஒன்றை அந்நாட்டு தூதரகம் கொண்டுவந்துள்ளது. 

அமெரிக்க விசா பெற விரும்புவோர் வழக்கமாகக் கேட்கப்படும் விவரங்களுக்கு மத்தியில் இனி அவர்களது சோஷியல் மீடியா கணக்குகளையும் தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் அந்தப் புதிய விதி. இனிமேல் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புபவர்கள், தங்களது ஃபேஸ்புக், ஃபிளிக்கர், கூகுள், இன்ஸ்டாகிராம், லிங்கெடின், யூ டியூப், ஈ-மெயில் விவரங்கள் போன்றவற்றை அளிக்க வேண்டும் என்று புதிய விதிமுறைகள் வந்துள்ளன. சோசியல் மீடியா செயல்பாடுகள் மூலம் அந்த நபரின் 5 ஆண்டுக்கால வரலாறு ஆராயப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்க விசா

விசா தொடர்பான நேர்காணலின் போது சோஷியல் மீடியா கணக்கு தொடர்பாகக் கேள்வி எழுப்பப்படலாம் எனவும் தெரிகிறது. தேசப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறதாக அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள அதே வேளையில் இந்த நடைமுறையால் விசா வழங்குவதற்கான காலக்கெடு மேலும் அதிகமாகும் என வருத்தம் தெரிவித்துள்ளனர் வல்லுநர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க