`நான் அழகியில்லை; இது என் திறமையின் அடையாளம்!'‍ `மிஸ் டீன் வேர்ல்டு' பட்டம் வென்ற இந்தியப் பெண் நெகிழ்ச்சி | "mumbai girl sushmita singh wins the Miss teen world 2019"

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (03/06/2019)

கடைசி தொடர்பு:18:05 (03/06/2019)

`நான் அழகியில்லை; இது என் திறமையின் அடையாளம்!'‍ `மிஸ் டீன் வேர்ல்டு' பட்டம் வென்ற இந்தியப் பெண் நெகிழ்ச்சி

12 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களுக்காக "மிஸ் டீன் வேர்ல்டு- 2019" என்ற அழகிப்போட்டி உலக அளவில் அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சுஷ்மிதா சிங் என்ற பெண் மிஸ் டீன் வேர்ல்டாக வாகை சூடியுள்ளார்.

பெண்

picture courtesy -  https://www.facebook.com/MissTeenMundial

 

" உலக அளவில் பதின்ம வயதுப் பெண்களுக்கான அழகிப் போட்டி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இந்த வருடம் நடந்த அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொள்ளும் அழகியைத் தேர்வு செய்வதற்கான தேசிய அளவிலான போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் முதலே தொடங்கியது. போட்டோ ஷூட், மாடலிங், ஃபேஷன், டிரஸ்ஸிங், செயல்பாடுகள் எனப் பலகட்ட போட்டிகளுக்குப் பின் மும்பையைச் சார்ந்த சுஷ்மிதா சிங் இந்திய அளவில் தேர்வானார். இவர் மும்பையில் உள்ள கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தேசிய போட்டி முடிந்து ஒரு மாத இடைவெளியில் பலகட்ட பயிற்சிகள் எடுத்து உலக அளவிலான போட்டிக்கு சுஷ்மிதா தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

இதையடுத்து கடந்த வாரம் "மிஸ் டீன் வேர்ல்டு- 2019-க்கான போட்டிகள் அமெரிக்காவில் எட்டு நாள்களாக நடைபெற்றது. பலகட்ட சுற்றுகளுக்குப் பின் கேள்வி பதில் சுற்றில் சுஷ்மிதாவிடம், "நீங்கள் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மற்றவர்களுக்கு எப்படி முன்மாதிரியாக இருப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது" அதற்கு "உண்மையில் நான் அழகியில்லை. என்னுடைய திறமையால்தான் நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். இது என் திறமையின் அடையாளம். பெண்கள் அவர்களின் கனவுகளுக்கு உயிர்கொடுக்க, அவர்களின் போராட்டங்களில் நான் என்றும் முன்மாதிரியாக நிற்பேன்" எனப் பதிலளித்து நடுவர்களின் மனதில் இடம்பிடித்தார். எல்லாச் சுற்றிலும் தன்னுடைய திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியதால் சுஷ்மிதா சிங் "மிஸ் டீன் வேர்ல்டு- 2019" என்ற வாகை சூடி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.