`என்.ஜி.ஓ'வில் இருந்து விலகியது ஏன்?- ஆஸ்கர் விருது பெற்ற பெண்கள் விளக்கம் | oscar winning actors resign job from ngo due to salary problem

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (04/06/2019)

கடைசி தொடர்பு:12:30 (04/06/2019)

`என்.ஜி.ஓ'வில் இருந்து விலகியது ஏன்?- ஆஸ்கர் விருது பெற்ற பெண்கள் விளக்கம்

நாப்கின் தயாரிக்கும் பணியில் பெண்களை ஈடுபடுத்துவதில் இருக்கும் சமூகத் தடைகள், அப்படியே பெண்கள் வந்தாலும் அதனை அவர்கள் வெளியில் சொல்ல காட்டும் தயக்கங்கள் என இவற்றையெல்லாம் மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான்  `Period. End of Sentence’ என்ற ஆவணப் படம்.  கிராமப்புறத்திலுள்ள ஏழை எளிய பெண்களும் நாப்கின் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மலிவு விலையில் நாப்கின் தயார் செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்கிய கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் கதை இது.

இந்த ஆவணப்படம், 2019-ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றது. இந்தப் படம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. சுமன் மற்றும் சினேகா ஆகிய இரண்டு பெண்களும் இந்த ஆவணப்படத்தில் முக்கிய இடம் பெற்றார்கள் என்றே சொல்லலாம். இவர்கள் வேலைபார்த்துக்கொண்டிருந்த என்.ஜி.ஓ-வில் இருந்து தற்போது சரிவர சம்பளம் கொடுக்கப்படவில்லை என்கிற காரணத்தினால் வெளியேறியிருக்கிறார்கள்.

ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்தவர்கள்

இதுகுறித்து தனியார் நிறுவனத்திற்கு அவர்கள் கொடுத்த பேட்டியில், ``கடந்த ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. நாங்கள் நடித்திருந்த படம் ஆஸ்கார் விருது பெற்றதால், உத்தரப்பிரதேச முதல்வர் எங்கள் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். அந்தப் பணத்தை என்.ஜி.ஓ-வில் தரச் சொல்லி கேட்டார்கள். அப்படி பணத்தை தரவில்லை எனில் வேலையை விட்டு நிற்கச் சொன்னார்கள். இதுவரை என்.ஜி.ஓ-வில் எந்த சம்பள உயர்வையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் கொடுக்கிற சம்பளத்தைக்கூட கொடுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? நாங்கள் ஒரு லட்ச ரூபாய் பணத்தை என்.ஜி.ஓ-வுக்கு கொடுக்காததால் எங்களுக்கு சம்பளம் வழங்காமல் இருந்தார்கள். அதனால், தற்போது அந்த என்.ஜி.ஓ-வில் இருந்து விலகியிருக்கிறோம்'' என்று கூறியுள்ளனர். 

 

நன்றி : ANI

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க