``கணித்ததைவிட வேகமாக உயரும் கடல்நீர் மட்டம்!” - வங்கதேசம் நீரில் மூழ்கும் அபாயம்! #WhereisMyWater | Global Sea Levels Could Rise by Much More Than Previously Predicted

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (04/06/2019)

கடைசி தொடர்பு:15:27 (04/06/2019)

``கணித்ததைவிட வேகமாக உயரும் கடல்நீர் மட்டம்!” - வங்கதேசம் நீரில் மூழ்கும் அபாயம்! #WhereisMyWater

'நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ்' அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பு கணித்ததைவிட, கடல்நீர் மட்டம் 6 மீட்டர் அளவுக்கு அதிகமாக உயரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்நீர் மட்டம்

'கடல்நீரின் மட்டம் உயர்வது அதிகரித்திருப்பதால், வருங்காலத்தில் வங்காள தேசத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்படலாம்' என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். முன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்நீரின் மட்டம் விரைவாக உயர்ந்துவருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு, கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா கடல்நீர் மட்டம் விரைவாக உயர்வதுதான் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

'நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ்' அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பு கணித்திருந்த கணிப்பின்படி, வருகிற 2100-ம் ஆண்டு கடல்மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை மிகவும் மோசமாகியிருப்பதால், 6 மீட்டர் அளவுக்கு அதிகமாக உயரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதன் காரணமாக, 10 லட்சம் சதுர கி.மீட்டருக்கு மேற்பட்ட நிலம் பறிபோகும். அதாவது, லிபியா தேசத்தின் நிலப்பரப்பு அளவிலான நிலம் கடலில் மூழ்கும்.

அதன் விளைவாக 24 லட்சம் மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழப்பார்கள். லண்டன்,  நியூயார்க், சாங்காய் போன்ற முக்கிய நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, நம் பக்கத்து தேசமான வங்கதேசம் மக்கள் வசிப்பதற்குத் தகுதியற்ற தேசமாக மாறும். முழுவதுமாகக் கடலில் மூழ்கும் நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.