முன்னேற்றம் அடைந்த கேப்டவுன் நகரம் - கைகொடுத்த அரசின் முயற்சி! #WhereIsMyWater | Cape Town dam levels showed a slight improvement over the past seven days, rising by 0.08%

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (04/06/2019)

கடைசி தொடர்பு:10:08 (05/06/2019)

முன்னேற்றம் அடைந்த கேப்டவுன் நகரம் - கைகொடுத்த அரசின் முயற்சி! #WhereIsMyWater

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் தண்ணீர் சேமிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

கேப்டவுன்

பூவுலகில் தண்ணீரே இல்லாத நகரம் என்று வேதனைக்குரிய பெயர் பெற்றது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம். கடந்த வருடம் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது. அங்கு நிலவிய கடுமையான வறட்சியைத் தேசிய பேரிடராக அறிவித்தது தென்னாப்பிரிக்க அரசு. தண்ணீர் சிக்கனத்துக்காகப் பல கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. கார் கழுவுவது, வீடுகளில் தோட்டங்களைப் பராமரிப்பது போன்ற பல செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ரேஷனில் மண்ணெண்ணெய் அளிப்பதுபோல், வாட்டர் பாயின்ட்கள் அமைத்து, தண்ணீரை அளந்து அளந்து கொடுத்தார்கள். ஒரு குடிமகனுக்கு ஒரு நாளைக்கான அனைத்துத் தேவைகளுக்கும் சேர்த்து 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. உலகிலேயே தண்ணீருக்காக முதன்முதலாகக் காவலர்களை நியமித்தது கேப்டவுன் நிர்வாகம்.

கேப்டவுன்

இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழையினால் கேப்டவுன் நகரில் உள்ள அணைகள் சிறிதளவு நிரம்ப ஆரம்பித்துள்ளது. இதனால் நீர் மட்டம் ஜீரோ லெவலில் இருந்து சிறிது சிறிதாக முன்னேறி 0.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது சிறிய வெற்றி என கேப்டவுன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தநிலையை அடைய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சில மாதங்களாக நிலத்தடி நீரைச் சேமிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்னும் முழுமையான வறட்சி தீரவில்லை எனக் குமுறுகின்றனர் கேப்டவுன் மக்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க