``வாக்கு இயந்திரம் வேண்டாம்!”- அமெரிக்கத் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸின் கோரிக்கை | United states senator for california pushes for the immediate passing of bill on paper ballot voting

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (06/06/2019)

கடைசி தொடர்பு:12:30 (06/06/2019)

``வாக்கு இயந்திரம் வேண்டாம்!”- அமெரிக்கத் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸின் கோரிக்கை

அமெரிக்கா கமலா ஹாரிஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அமெரிக்க வழக்கறிஞர் கமலா ஹாரிஸ். கலிபோர்னியா மாகாணத்தின் அரசு வழக்கறிஞராக ஐந்தாண்டுக்காலம் பதவி வகித்தவர். தற்போது 2020ல் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடுவதற்காக நாமினேஷன் தாக்கல் செய்துள்ளார். இவர் வரவிருக்கும் தேர்தலில் வாக்கு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு உபயோகப்படுத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அதற்காக அவர் சொல்லும் காரணம் இதுதான், “ வாக்கு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு உபயோகிக்க வேண்டும் என்று நான் சொல்லுவதற்கான காரணம் மிக எளிதானது. வாக்குச்சீட்டுகளை வெளிநாட்டு எதிரிகளால் ஹேக் செய்ய முடியாது. இதன்வழி தேர்தலும் பாதுகாப்பாக நடைபெறும். இது தொடர்பாகத் தற்போது செனட்டில் இருக்கும் மசோதாவைக் காலம் தாழ்த்தாமல் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவியது என்கிற குற்றச்சாட்டு ஆதாரங்கள் தரப்பட்டும் சரிவர விசாரிக்கப்படாமலேயேஉள்ளது. இந்தியத் தேர்தல்களில் வாக்கு இயந்திரப் புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் கமலாவின் இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க