`உலகின் 196 நாடுகளைச் சுற்றிய இளம்பெண்!' - 21 வயதில் சாதித்த லெக்ஸி | twenty one years old woman visits 196 countries in the world

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (07/06/2019)

கடைசி தொடர்பு:17:10 (07/06/2019)

`உலகின் 196 நாடுகளைச் சுற்றிய இளம்பெண்!' - 21 வயதில் சாதித்த லெக்ஸி

யணங்கள் பலவிதமான கதைகளைச் சொல்லிச் செல்லும். பயணங்கள் எல்லோருக்குமான மருந்து. நெடுந்தூரம் பயணித்து எழில் கொஞ்சும் இயற்கையின் அழகை ரசித்துச் சிலிர்க்கும்போது மனதின் ஓரத்தில் உள்ள சுமை கூடச் சுகமாய் மாறும். இப்படியான பயணங்களின் காதலிதான் லெக்ஸி அல்ஃபோர்ட். 21 வயதான இவர் உலகின் அத்தனை நாடுகளையும் சுற்றி வந்த இளம் வயதுப் பெண் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார். பயணங்களின் காதலியான லெக்ஸியின் கதைதான் இது!

நாடுகளை சுற்றிய இளம்பெண்

லெக்ஸியின் குடும்பம் மிகப்பெரிய செல்வந்தரான குடும்பமெல்லாம் இல்லை. லெக்ஸியின் அப்பா டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறார். சிறு வயதில் பள்ளிகளில் விடுமுறை விடும் சமயம் பல்வேறு நாடுகளுக்கு லெக்ஸியின் பெற்றோர்கள் லெக்ஸியை அழைத்துச் சென்றிருக்கின்றனர். இப்படியாகத் தான் அவருடைய பயணம் ஆரம்பித்திருக்கிறது. சின்ன வயதிலேயே 196 நாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்திருக்கிறது. அவருடைய கனவுக்கு அவருடைய பெற்றோர்களும் வழிகாட்டியுள்ளனர்.

லெக்ஸி, கம்போடியா முதல் எகிப்து வரை பல நாடுகளுக்குப் பயணித்துவிட்டார். அவர் ஆசைப்பட்டதுபோல் 196 நாடுகளையும் சுற்றிப் பார்த்துவிட்டார். 196வது நாடாக அவர், கடந்த மே மாதம் 31-ம் தேதி வடகொரியா வந்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கு `இளம் வயதிலேயே அனைத்து நாடுகளையும் சுற்றி வந்தவர்!' என்கிற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் லெக்ஸி. 

லெக்ஸி

பயணங்கள் குறித்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு லெக்ஸி கொடுத்த பேட்டியில், ``உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதில் என் பெற்றோர்கள் பங்கு மிக முக்கியமானது. மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு அழகானது. அவர்கள் அந்த வாழ்க்கையை எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமாக இருக்கும். 

பயணத்துக்காக அதிக அளவில் செலவு பண்ணத் தேவையில்லை. நான் ஆடம்பரமான இடங்களை பயணத்தின்போது தேட மாட்டேன். இருக்கிற இடத்தைச் சரியாக பயன்படுத்திக்க நினைப்பேன். அதே மாதிரி பெரும்பாலும் பிளான் பண்ணி எந்த இடங்களுக்கும் நான் போனதில்லை. ஆனா, போகிற இடங்களிலெல்லாம் ஒவ்வொரு விதமான புதுப்புது அனுபவங்களைத் தெரிந்துகொள்வேன். முன்னாடியே பிளான் பண்ணி ஆஃபர் இருக்கும் சமயம் பார்த்து பிளைட் புக் செய்துகொள்வேன். 

லெக்ஸி

அதேபோன்று என் பெற்றோர்களிடம் அதிக அளவில் பணம் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டேன். தேவையில்லாத பொருள்களை வாங்கி பணத்தை வீணடிக்கவும் மாட்டேன். கிடைக்கும் பணத்தை எல்லாம் சேமித்து பயணத்துக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்வேன். ஐ லவ் டிராவல்!'' எனக் கூறியிருக்கிறார்.

பயணங்கள் அலாதியானவை..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க