`ஓஹோ விபத்து செல்ஃபியா... இங்க கொஞ்சம் வாங்க!’ - இளைஞரை வறுத்தெடுத்த ஜெர்மன் போலீஸ்! #MyVikatan | German Policeman belittles a person after fatal truck accident

வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (07/06/2019)

கடைசி தொடர்பு:20:35 (24/06/2019)

`ஓஹோ விபத்து செல்ஃபியா... இங்க கொஞ்சம் வாங்க!’ - இளைஞரை வறுத்தெடுத்த ஜெர்மன் போலீஸ்! #MyVikatan

ஒரு விபத்து என்றால், உதவி செய்யாமல் பலர் செல்போனில் செல்ஃபி எடுப்பதையும் வீடியோ எடுப்பதையும் பார்த்திருக்கிறோம். அது எவ்வளவு பெரிய தவறு என்பது அவர்களுக்குப் புரியவில்லையா, விளம்பர மோகமா என்று தெரியவில்லை. வீடியோ எடுப்பதற்குப் பதிலாக உயிருக்குப் போராடும் நபருக்கு உதவி செய்தால் அவர் உயிரைக் காப்பாற்றலாம். இது தெரிந்தும் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? இந்த மாதிரி நபர்களுக்குச் சவுக்கடி கொடுப்பதுபோல் செயல்பட்ட ஜெர்மனி போலீஸ் அதிகாரியை ஜெர்மனி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். அவரை ரியல் ஹீரோ என்று புகழ்ந்து வருகிறார்கள்.

File Image
 

அந்த ஜெர்மன் போலீஸ் அதிகாரியின் பெயர் ஸ்டீபன். நேற்று முன் தினம் (5.6.2019)  நியூரம்பெர்க் என்ற இடத்தில் பெரிய விபத்து ஒன்று நடந்தது. விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். காருக்குள் இருந்தவாறே அடிபட்டவரைப் போட்டோ எடுத்த ஒருவரை போலீஸ் அதிகாரி ஸ்டீபன் கவனித்தார். உடனே அவரிடம், `அவர் யார் என்னவென்று விசாரிக்கக்கூட உனக்குத் தோன்றவில்லை. ஆனால், புகைப்படம் எடுக்கிறாய்.  இது நல்ல விஷயம் அல்ல, உன் செயல் வெட்கப்படக்கூடிய ஒன்று. புகைப்படம் எடுத்ததற்காக 128.50 யூரோ (இந்திய மதிப்பில் 10,000 ரூபாய்) அபராதமாகக் கட்ட வேண்டும். உன் லைசென்ஸ், பாஸ்போர்ட் அனைத்தையும் கொண்டு வந்து காட்ட வேண்டும்’’ என்று அந்த நபரை வறுத்தெடுத்துவிட்டார். அந்த நபர் கூனிக்குருகி நிற்கிறார். இந்தக் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு அவருக்குப் பாராட்டுகள் குவிகிறது. 

ஜெர்மன் போலீஸ்
 

அதன் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த ஸ்டீபன்,  இந்தப் புகைப்படங்களால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை, இது ஒரு துயரச் சம்பவம் என்றும் அழுத்தந்திருத்தமாகப் பேட்டியளித்துள்ளார்.

 

 

செய்தி  : ஜேசு ஞானராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/