காருதான் பிஎம்டபிள்யூ; ஆனா அதுக்கு ஊத்துற பெட்ரோல்? - சிசிடிவியால் சிக்கிய சீன விவசாயி | Chinese farmer arrested for allegedly stealing chickens and ducks in order to buy fuel for his BMW

வெளியிடப்பட்ட நேரம்: 08:16 (11/06/2019)

கடைசி தொடர்பு:08:19 (11/06/2019)

காருதான் பிஎம்டபிள்யூ; ஆனா அதுக்கு ஊத்துற பெட்ரோல்? - சிசிடிவியால் சிக்கிய சீன விவசாயி

தனது பிஎம்டபிள்யூ காருக்கு பெட்ரோல் போடுவதற்காக சீன விவசாயி ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன விவசாயி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லின்ஷி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சமீபகாலமாகக் கோழி உள்ளிட்ட வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் திருடுபோவதாக அடிக்கடி போலீஸில் புகார் வந்த வண்ணம் இருந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் விவசாயி ஒருவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. 50 வயதாகும் அந்த விவசாயி, அந்த ஊரில் உள்ள வசதியானவர். அவர் வைத்திருக்கும் பிஎம்டபிள்யூ காருக்கு பெட்ரோல் போடுவதற்காக இப்படி கிராமங்களில் உள்ள கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளை திருடியுள்ளார். திருடிய பறவைகளை விற்று அதன்மூலம் தனது காருக்கு பெட்ரோல் போட்டுவந்துள்ளார். 

சீன விவசாயி

அவர் வைத்திருக்கும் காரின் மதிப்பு ரூ.2 கோடி. இந்த காரில் வெளியே செல்லும் அவர், கிராமங்களில் கோழி உள்ள வீடுகளை நோட்டமிட்டு பின்பு அதைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இப்படிச் செல்லும்போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் அவர் திருடியது தெரியவர அதன்மூலம் அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக கைதுக்குப் பயந்து போலீஸிடம் இருந்து காரில் வேகமாகச் சென்று தப்பித்துள்ளார் அந்த நபர். பின்னர் போலீஸார் அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க