சேற்றில் புரண்டு ஓடிய 15,000 பேர்... ஜெர்மனியில் களைகட்டிய சகதி விளையாட்டு! #MyVikatan | Muddy game held at germany

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (11/06/2019)

கடைசி தொடர்பு:12:15 (12/06/2019)

சேற்றில் புரண்டு ஓடிய 15,000 பேர்... ஜெர்மனியில் களைகட்டிய சகதி விளையாட்டு! #MyVikatan

கோடைகாலம் வந்துவிட்டாலே, ஜெர்மனியர்களுக்குக் கொண்டாட்டம்தான். அதுவரையிலும் தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திக்கொண்டவர்கள், இப்போதுதான் அந்த உடைகளிலிருந்து தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள்.

சகதி விளையாட்டு

இந்த 3 மாதங்களைத் தவறவிட்டால், அப்புறம் விட்டமின் டி- க்காக அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும். அதனால், இந்த கோடை காலத்தில் பல விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். அதில் ஒன்றுதான் சேற்றில் உருண்டுபுரளும் விளையாட்டு.

சகதி விளையாட்டு

ஜெர்மனியிலுள்ள ஆர்ன்பெர்க் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டில், சுமார் 15,000 பேர் கலந்து கொண்டனர்.போட்டியாளர்கள் சேறு மற்றும் அழுக்கு நீர் என்று 20-க்கும் மேற்பட்ட தடைகளைக் கடந்துசெல்லும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது. உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இந்தப் போட்டிக்கு இருப்பதால், இதுபோன்று இன்னும் 2 போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற உள்ளன. ஆக மொத்தத்தில், இந்தக் கோடைகாலம் ஜெர்மனியர்களுக்குக் கொண்டாட்டம்தான்!

செய்தி  : ஜேசு ஞானராஜ்