`200 கி.மீ தொலைவு; 5ஜி தொழில்நுட்பம்' - பித்தப்பை அறுவைசிகிச்சையில் மருத்துவர்கள் சாதனை! | Doctors conduct remote surgery using 5G technology in China

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (12/06/2019)

கடைசி தொடர்பு:15:05 (12/06/2019)

`200 கி.மீ தொலைவு; 5ஜி தொழில்நுட்பம்' - பித்தப்பை அறுவைசிகிச்சையில் மருத்துவர்கள் சாதனை!

200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நோயாளிக்கு 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்து புதிய சாதனை படைத்துள்ளனர் சீன மருத்துவர்கள்!

சீனாவில், பித்தப்பை பாதித்த ஒரு நோயாளிக்கு 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள மருத்துவரால் 5ஜி தொழில்நுட்பம் மூலம் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. 

அறுவை சிகிச்சை

சீனாவின் ஷென்னோங்கிஜியா (Shennongjia) மாவட்டத்தில் உள்ள தய்ஹீ மருத்துவமனையில் வயிற்றுவலியின் காரணமாக ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் நோயாளிக்குப் பித்தப்பையில் கடுமையான பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால், 'லேப்ராஸ்கோபிக் கோலீசிஸ்டெக்டோமி' என்னும் நவீன அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்ற முடிவு செய்தனர். ஆனால், அந்த சிகிச்சை அளிக்கும் குறிப்பிட்ட நிபுணர்கள் அந்த மருத்துவமனையில் இல்லாததால் வேறு ஒரு முடிவெடுத்தனர். அதே மருத்துவமனையின் வேறு கிளையிலிருந்த மருத்துவர் அங்கிருந்தவாறே நேரலையில் மேற்கொள்ளும் அறுவைசிகிச்சை அளிக்க முடிவெடுத்தனர். அதாவது, ஷியன் நகரில் உள்ள மற்றொரு மருத்துவமனையின் கிளையிலிருந்து 5ஜி ரிமோட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரலையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதன்முதலாக இந்த மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சைக்குப் பிறகு, நோயாளி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

பித்தப்பை

இந்த அறுவைசிகிச்சையை, 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் ஹுவெய் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. நேரலை வீடியோவில் ரிமோட் மூலம் அறுவைசிகிச்சை செய்தாலும், இந்த தொழில்நுட்பத்தால் நேரிலிருந்து செய்வதுபோல, தங்கு தடை இல்லாமல், தெளிவாக இருந்ததாகச்  சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

5ஜி

தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை 5ஜி மொபைல் ஃபோன் மட்டுமே நமக்குத் தெரியும். 5ஜி தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டிவரும் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம், 5ஜி தொழில்நுட்பத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தீவிரமாக முயன்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்தத் தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு அறுவைசிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் உலகில் முதல்முறையாகச் சீனாவில், 5 ஜி தொழில்நுட்ப உதவியுடன் ஒரு நோயாளிக்கு 3,000 கி.மீ தொலைவிலிருந்து மூளையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிலும் பித்தப்பை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது உலகத்திலேயே இதுவே முதல் முறை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க