15,000 கிலோ காகிதக் கழிவு சேகரித்து 8 வயது சிறுமி சாதனை. பாராட்டலாமே... | Eight year old girl created record by collecting 15 tonnes paper waste

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (12/06/2019)

கடைசி தொடர்பு:16:20 (12/06/2019)

15,000 கிலோ காகிதக் கழிவு சேகரித்து 8 வயது சிறுமி சாதனை. பாராட்டலாமே...

நிலா டோனி காகிதக் கழிவு

துபாயில் வசித்துவரும்  8 வயது இந்தியச் சிறுமி நியா டோனி,  சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வை மேற்கொண்டுவருகிறார். சுற்றுச்சூழலைப் பேணிக்காக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த  நியா டோனி, தேசிய ரீதியிலான எமிரேட்ஸ் சுற்றுச்சூழல் குழுமத்தின்  மறுசுழற்சி  பிரசாரத்தின் ஒரு பகுதியாக 15,000 கிலோ காகிதக் கழிவுகளைச் சேகரித்துள்ளார். 

நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, எமிரேட்ஸ் சுற்றுச்சூழல் குழு (EEG) கார்பரேஷன்கள், கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் / குடும்பங்கள் என  மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேற்கொண்ட பிரசாரம்,  சுமார்  73,393 மெட்ரிக் டன்  காகிதக் கழிவுகளைக் (கார்பன் உமிழ்வு) குறைக்க உதவியுள்ளது. காகிதக்  கழிவுகள்  மட்டுமின்றி,  பிளாஸ்டிக், கண்ணாடி, கேன்கள் மற்றும் மொபைல் போன்கள் என  மக்களிடமிருந்து14,914 கிலோகிராம் எடையில்,  அனைத்து விதமான கழிவுகளையும் சேகரித்துள்ளார். 8 வயது சிறுமியின் முயற்சி மற்றும் அசாதாரண சாதனையை  கௌரவிக்கும் வகையில், அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் மறுசுழற்சி(EEG) விருதுகளுக்கான 22-வது பதிப்பில் டோனி சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, நான் வசிக்கும் பகுதிகளிலிருந்து 15 ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளைச் சேகரித்து, அதனை மறுசுழற்றி செய்ய தொழிற்சாலைக்கு அனுப்பிவைத்துள்ளேன். மேலும், மக்கள் வெளியே வீசும் காகிதத்துண்டுகள், நாளிதழ் மற்றும்  மற்ற காகிதங்களை எல்லாம் சேகரித்துவருகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி பற்றி  விழிப்புணர்வைப் பரப்புவதற்கு, என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், வயதான பிறகு நாங்கள் பசுமையான சூழலில் வாழ்வோம்." 

குறைந்தபட்சம், குப்பை போடாமலிருப்பதுதான் அந்தச் சிறுமிக்கு நாம் தரும் மிகப்பெரிய பாராட்டாக இருக்கும்.