தொடரும் வன்முறை... அரசு அலுவலகங்கள் மூடல்!- என்னதான் நடக்கிறது ஹாங்காங்கில் | Hong Kong extradition bill debate delayed after massive protests

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (13/06/2019)

கடைசி தொடர்பு:17:00 (13/06/2019)

தொடரும் வன்முறை... அரசு அலுவலகங்கள் மூடல்!- என்னதான் நடக்கிறது ஹாங்காங்கில்

ஹாங்காங்கில் தொடரும் வன்முறைச் சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஹாங்காங்

ஹாங்காங்கில் கொண்டுவரப்படும் `கான்ட்ரோவர்ஷியல் எக்ஸ்ட்ராடிஷன்’ பில்லை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் உச்சக்கட்டமாக அம்மாநில நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, சாலைகளில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசியும், ரப்பர் புல்லட்டுகளைப் பயன்படுத்தியும் அவர்களை கலைக்க காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

வன்முறை

ஆனால் போராட்டம் குறைந்தபாடில்லை. போராட்டத்தின் எதிரொலியாக அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் `கான்ட்ரோவர்ஷியல் எக்ஸ்ட்ராடிஷன்’சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளக் கூடாது என்று கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.

காவல்துறை

`கான்ட்ரோவர்ஷியல் எக்ஸ்ட்ராடிஷன்’ என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், `வேறு நாடுகளுக்குச்சென்று குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை நாடு கடத்த இதுவரை ஹாங்காங்கில் எந்தச் சட்டமும் இல்லை. தற்போது இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், ஹாங்காங்கில் இருக்கும் ஒருவர், மற்றொரு நாட்டுக்குச்சென்று குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, மீண்டும் நாடு திரும்பினால், அவரை சம்பந்தபட்ட நாட்டுக்குக் கைதியாக அனுப்பிவைக்க முடியும்’ என்பதே இந்தச் சட்டத்தின் சாரம்சம்.

கண்ணீர் புகை குண்டு

இது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். வரி ஏய்ப்பு செய்தால் கூட நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என நாடாளுமன்றத்துக்கு முன் திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இது தொடர்பாக தலைமை அதிகாரி கேரி லேம், ``இது ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை. மீண்டும் அமைதி திரும்பவேண்டும். இந்த வன்முறை அமைதியாக இருக்கும் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குடியரசு நாட்டில் சட்டம் ஒழுங்கைப் புறந்தள்ளும் செயல்களை ஒருபோதும் ஏற்கமுடியாது” என்றார்.