'பெண்ணிய மாரத்தான்' - சர்ச்சைக்குரிய வகையில் உடை பிரசாரம் செய்த ரஷ்ய நிறுவனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! | A russian company announces bonus to the women employees who wear skirt or dress

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (13/06/2019)

கடைசி தொடர்பு:22:30 (13/06/2019)

'பெண்ணிய மாரத்தான்' - சர்ச்சைக்குரிய வகையில் உடை பிரசாரம் செய்த ரஷ்ய நிறுவனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

'ஸ்கர்ட் அல்லது சிறிய கவுன் அணியும் பெண் தொழிலாளர்களுக்கு அதிக வெகுமதி தரப்படும்' என்று அறிவித்த ரஷ்ய நிறுவனம்மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. 'பெண்ணிய மாரத்தான்' என்கிற பெயரில் இப்படியொரு பிரசாரத்தை ஜூன் 30 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது, ரஷ்யாவிலுள்ள Tatprof எனும் அலுமினிய உற்பத்தி நிறுவனம்.

ஸ்கர்ட்

 

பெண் தொழிலாளர்கள், முழங்காலிலிருந்து கீழே 5 சென்டிமீட்டர் வரையிலான அளவில் ஸ்கர்ட் அல்லது கவுன் உடுத்துபவர்களுக்கு, 100 ரூபிள்ஸ். அதாவது 104 ரூபாய், அவர்களின் ஊதியத்தில் சேர்க்கப்படும் என்று அறிவித்தது Tatprof நிறுவனம். அந்த சன்மானத் தொகையைப் பெற பெண்கள், அவர்களின் புகைப்படத்தை நிறுவனத்திற்குப் பகிர வேண்டும். இது, அணிகளை இணைப்பதற்கான சிறந்த வழி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைப் பற்றி நிறுவனத்தார்களிடம் கேட்டபோது, "நாங்கள் எங்கள் வேலை நாள்களை பிரகாசப்படுத்த விரும்பினோம். அதற்காகவே இந்த முயற்சி. பல பெண்கள் 'பேன்ட்' அணிந்து வருகிறார்கள். இந்த முயற்சி அவர்களின் பெண்மை மற்றும் அழகை உணரவைக்கும் என நம்புகிறோம்" என்று அந்நாட்டு வானொலியில் பதிவுசெய்திருக்கிறார்கள்.

Skirts

Tatprof நிறுவனத்தின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துவருகிறது. இந்நிலையில், 60 பெண் தொழிலாளர்கள் இந்தப் பிரசாரத்தில் ஏற்கெனவே கலந்துகொண்டதால், பாலியல் ரீதியாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்த நிறுவனம் நிராகரித்துள்ளது. இந்நிறுவனத்தில் வேலை செய்யும் Anastasia Kirillova என்பவர், "இதுபோன்ற பிரசாரத்தை நடத்த வேண்டும் என்று கூறியவர், எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி Sergei Rachkov. அவர், இருபாலினரும் இணைந்து வேலை செய்வதில் இருக்கும் சிக்கலைப் பற்றி மிகவும் கவலைகொண்டார். அவர், உண்மையிலேயே நிறுவனத்தின் ஒவ்வொரு பெண் ஊழியரின் சாராம்சத்தைப் பராமரிக்க விரும்புகிறார். இப்படிச் செய்வதனால், இளம் பெண்கள், ஆண்களைப்போன்று சிகையை அலங்கரித்துக்கொள்ள மாட்டார்கள். ஆண்கள் அணியும் பேன்ட்டை பெண்கள் அணிய மாட்டார்கள் என நினைத்தார். மேலும், அவர்கள் கைவினை வேலைகளை சிறப்பாகச் செய்ய முடியும் எனவும், குழந்தைகளை நன்கு பராமரிக்க முடியும் எனவும் நம்புகிறார். எங்கள் நிறுவனம், ஆண் பணியாளர்களுக்கான போட்டிகளையும் நடத்தியிருக்கிறது. அவர்களுக்காகக் கடந்த வாரம் pull-up போட்டி நடத்தப்பட்டது" என்று கூறியுள்ளார்.