பாகிஸ்தான் அதிபர் தேர்தல்: நவாஸ் செரீப்பின் ஆதரவாளர் போட்டி | Pakistan, presidential election, Muslim League (Nawaz) party, prime minister, Nawaz Sharif, Supporter, mamnun Hussein

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (24/07/2013)

கடைசி தொடர்பு:17:21 (24/07/2013)

பாகிஸ்தான் அதிபர் தேர்தல்: நவாஸ் செரீப்பின் ஆதரவாளர் போட்டி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில், பிரதமர் நவாஸ் செரீபின் நெருங்கிய ஆதரவாளர் மம்னூன் உசைன் போட்டியிடுகிறார்.

பாகிஸ்தானின் அதிபரின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி புதிய அதிபருக்கான தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இம்மாதம் (ஜூலை) 30ஆம் தேதி அதிபர் தேர்தலை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில், பிரதமர் நவாஸ் ஷெரீபின் நெருங்கிய ஆதரவாளரும், சிந்து மாகாணத்தின் ஆளுநராக 1999ஆம் ஆண்டு பதவி வகித்தவருமான மம்னூன் உசைன் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். கராச்சியின் முன்னணி தொழிலதிபரான உசைன் வெற்றி பெற்றால், பாகிஸ்தானின் 11-வது அதிபராக பொறுப்பேற்பார்.

இதேபோல் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ரசா ரப்பானி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் முன்னாள் நீதிபதி வஜிஹூதீன் அகமது ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் ஜூலை 27-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 4 மாகாண சபைகள் மற்றும் தேசிய பாராளுமன்றம் ஆகியவை இணைந்து அதிபரை தேர்வு செய்யும். புதிய அதிபர் பதவியேற்பு விழா செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்