வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (27/11/2013)

கடைசி தொடர்பு:15:29 (27/11/2013)

பாகிஸ்தான் புதிய ராணுவத் தளபதியாக ரஹீல் ஷெரீப் நியமனம்!

இஸ்லாமாபாத்: பர்வேஸ் கயானி ஓய்வுபெறுவதையொட்டி, பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக ரஹீல் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் செய்த பரிந்துரைக்கு அதிபர் மமூன் ஹுசேன் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாகிஸ்தானின் தற்போதைய ராணுவத் தளபதியான பர்வேஸ் கயானி வருகிற வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அப்பதவிக்கு ரஹீல் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்