ராஜபக்சேவுடன் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சந்திப்பு!

கொழும்பு: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இலங்கை அதிபர் ராஜபக்சேவை இன்று சந்தித்து பேசினார்.

இதுகுறித்து இலங்கை அதிபர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், ''அதிபர் ராஜபக்சேவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்ரவனும் இன்று (2ஆம் தேதி) சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், வடமாகாண சபையின் நிர்வாக பிரச்னைகள் குறித்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினார்'' எனக் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!