இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவை, இந்திய விமானப்படை தளபதி ஆருப் ராஹா சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்திய விமானப்படை தளபதி ஆருப் ராஹா இலங்கை சென்றுள்ளார். அங்கு அவரை கௌரவிக்கும் வகையில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. இதன் பின்னர் அந்நாட்டு விமானப்படைத் தளபதி குணதிலகவை, ஆருப் ராஹா சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் ராஜபக்சேவையும், இந்திய விமானப்படை தளபதி ஆருப் ராஹா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இந்திய விமானப்படை தளபதி ஆருப் ராஹா கூறுகையில், ''இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையே கூட்டு ராணுவப் பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்தப்பட்டது'' எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!