வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (21/08/2014)

கடைசி தொடர்பு:14:51 (21/08/2014)

அமெரிக்க பத்திரிகையாளர் கொலை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஐ.நா. கண்டனம்!

ஐ.நா.: அமெரிக்க பத்திரிகையாளரை கொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈராக் அரசுக்கு எதிராக அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்த போரின் மூலம் ஈராக்கின் பல்வேறு பகுதிகளை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து, ஈராக் அரசுக்கு ஆதரவாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் யூடியூப் மற்றும் அல் புர்கான் மீடியா ஆகிய இணைய தளங்களில் ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தனர். சுமார் 4 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில், ஈராக் போர் குறித்து செய்தி சேகரித்து வந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொலை செய்யப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது. மேலும், தங்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்த வேண்டும். இல்லையேல் தினமும் அமெரிக்க மக்கள் ரத்தம் சிந்துவார்கள் என மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த கொடூர செயலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தனி நாடு அமைக்க நினைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள மக்களை படுகொலை செய்து வருகின்றனர். தற்போது வெளியாகி உள்ள பத்திரிகையாளர் படுகொலை சம்பவத்தின் காட்சி மிகவும் கொடூரமானது. இவை வெறுக்கத்தக்க குற்றமாக பார்க்க வேண்டியது. இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவோர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்