வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (17/09/2014)

கடைசி தொடர்பு:11:01 (17/09/2014)

சீனா நட்பின் அடையாளமாக இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு: ராஜபக்சே அறிவிப்பு!

கொழும்பு: சீனாவுடனான நட்பின் அடையாளமாக இலங்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படுவதாக ராஜபக்சே அறிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங் முதல் முறையாக இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சீனாவுடன் ஏற்பட்ட நட்பின் அடையாளமாக இலங்கை அதிபர் ராஜபக்சே, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5–ம், டீசல் லிட்டருக்கு ரூ.3–ம் குறைக்கப்படும் என்று அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

அதேபோல சீனா நிதியுதவியுடன் நோரோச்சோலை அனல்மின் திட்டம் நிறைவேற்றப்பட இருப்பதால் மின் கட்டணமும் 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்