வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (27/09/2014)

கடைசி தொடர்பு:10:03 (27/09/2014)

காஷ்மீர் குறித்த நவாஷ் ஷெரீப்பின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது: இந்தியா நிராகரிப்பு!

நியூயார்க்: காஷ்மீர் குறித்து ஐ.நா.சபையில் நவாஷ் ஷெரீப் தெரிவித்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியா நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபையின் பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப், காஷ்மீர் விவகாரத்தி்ல் ஐ.நா. தீர்மானத்தின்படி செயல்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் ஜம்மு காஷ்மீர் பிரச்னை தொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்காக, காஷ்மீர் மக்கள் காத்திருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் பிரச்னை முக்கியமானது. அது, நிச்சயம் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு உதவ வேண்டியது சர்வதேச சமுதாயத்தின் பொறுப்பு என்று கூறினார்.

இந்நிலையில், அதற்கு பதிலளித்த இந்தியா, ஐ.நா. சபையில் தேவையற்ற குறிப்புகளை பாகிஸ்தான் பிரதமர் எழுப்பியுள்ளார். அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரிப்பு தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்