சொத்துக்கள் முழுவதையும் செலவழிக்க பில்கேட்சுக்கு 218 ஆண்டுகள் ஆகுமாம்!

நியூயார்க்: பில்கேட்சுக்கு தனது சொத்துக்கள் முழுவதையும் செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகும் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரும், அமெரிக்கருமான பில்கேட்சுக்கு, தனது சொத்துக்கள் முழுவதையும் செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகும் என சர்வதேச ஆய்வு ஒன்று கூறியுள்ளது. தினமும் 6 கோடி ரூபாயை அவர் செலவழிப்பதாக கணக்கிட்டு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபேம் என்ற அரசுசாரா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஏழைகளில் பாதிபேரிடம் உள்ள சொத்துக்களுக்கு இணையான சொத்து மதிப்பு உலகின் முதல் 85 பணக்காரர்களிடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தனது சொத்துக்கள் முழுவதையும் செலவிட மெக்சிகோ பணக்காரர் கார்லஸ் சிம்முக்கு 220 ஆண்டுகளும், மற்றொரு அமெரிக்க உலகமகா பணக்காரரான வாரன் ஃபப்பெட்டுக்கு 169 ஆண்டுகளும் ஆகும் என அந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!