மேன் ஆப் ஆக்‌ஷன்: மோடியைப் புகழும் ஒபாமா!

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை  ஒரு சிறந்த செயல் வீரர் மேன் ஆப் ஆக்‌ஷன்  என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.

இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மருக்கு பிரதமர் மோடி  சென்றார். அங்கு  மாநாட்டுக்கு வந்திருந்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்துப்  பேசினார்.

அப்போது அமெரிக்க அதிபர்  ஒபாமாவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசினார். இதற்கிடையில், உலக வர்த்தக அமைப்பில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து நேற்று பிரதமர் மோடி உரையாற்றியபோது சில கருத்துக்களைத்  தெரிவித்தார். இதை ஆக்கப்பூர்வ யோசனைகளாக ஏற்று அதற்கு அமெரிக்கா வரவேற்பளித்துள்ளது.

'பிரதமர் மோடியின் கருத்துக்களை,  விரிவான ஆலோசனைக்கு பின்னர் இவ்விவகாரத்திற்கு புதிய பாதையைக்  கண்டுபிடித்த அவரின்  தலைமைப் பண்பை ஒபாமா மிகவும் ஆதரித்துள்ளார்’ என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் ஜோஷ் எர்னெஸ்ட் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நேற்றைய சந்திப்புக்கு பின்னர் மோடிக்கு புகழ்மாலை  சூட்டிய ஒபாமா, அவர் ஒரு ’செயல்வீரர்’ (மேன் ஆப் ஆக்‌ஷன்) என்று குறிப்பிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!