உலக அழகி பட்டம் வென்றார் கொலம்பிய அழகி பௌலீனா வேகா!

நியூயார்க்: உலக அழகிப் போட்டியில் கொலம்பியா அழகி பௌலீனா வேகா பட்டம் வென்றார்.

2015–ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) போட்டி அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நடந்தது. அதில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, உக்ரைன் உள்ளிட்ட 88 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

உடை அலங்காரம், அறிவுத்திறன், உடல் அழகு உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் போட்டி நடந்தது. நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் கொலம்பியாவை சேர்ந்த பவுலினா வேகா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசுலா அழகி காபிரியலா இஸ்லர் கிரீடம் அணிவித்தார்.

22 வயதாகும் வேகா தொழில் நிர்வாகம் படித்து வருகிறார். தான் பங்கேற்ற முதல் சர்வதேச அழகிப் போட்டி இதுதான் என்றும், இதில் பட்டம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த நியா சாஞ்செஸ், உக்ரைனைச் சேர்ந்த டயானா ஹெர்குஸ் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். 1958 ஆம் ஆண்டுக்கு பின் உலக அழகி பட்டம் வெல்லும் கொலம்பிய பெண் என்ற பெருமையை வேகா பெற்றுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!