ரூ.1.1 லட்சம் கோடி லாபம் ஈட்டி ஆப்பிள் நிறுவனம் உலக சாதனை! | Apple's World of record

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (28/01/2015)

கடைசி தொடர்பு:17:20 (28/01/2015)

ரூ.1.1 லட்சம் கோடி லாபம் ஈட்டி ஆப்பிள் நிறுவனம் உலக சாதனை!

ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளிட்ட மின்னணு சாதன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், கடந்த காலாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி உலக சாதனை படைத்துள்ளது.

வணிக நிறுவனம் ஒன்று இந்த அளவு பெரிய லாபத்தொகையை பதிவு செய்துள்ளது உலகளவில் இதுவே முதல் முறை என்று ஹோவர்டு சில்வர்பிளாட் என்ற மதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திடம் தற்போதுள்ள 11 லட்சம் கோடி ரூபாயைக் கொண்டு ஐபிஎம் நிறுவனத்தை விலைக்கு வாங்கி விட முடியும் அல்லது ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் தலா 35 ஆயிரம் ரூபாயை வழங்க முடியும் என அந்த மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த பண்டிகை சீசனில் ஆப்பிள் ஃபோன்கள் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகளவில் விற்பனையானதும், குறிப்பாக சீனாவில் விற்பனை அதிகரித்ததுமே மிகப்பெரும் லாபத்துக்கு காரணமாக அமைந்தது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனம் ஈட்டியிருக்கும் மிகப்பெரிய லாபத்தொகையாகும். இதற்கு முன்பு எக்ஸோன்மொபில் மற்றும் கேஸ்ப்ரோம் போன்ற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் முந்தைய சாதனைகளை இது முறியடித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்